தொடர் கொலை கொள்ளை…. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகம்..!சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கிறாரா ஆளுநர்.?

0
Follow on Google News

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சந்தி சிரித்து வருகிறது சட்டம் ஒழுங்கு. தற்போது புதியதாக திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில், பாலியல் வன் கொடுமையால் மாணவிகள் தற்கொலை, சிறுமி எரித்து கொலை, காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை என தமிழக்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான் என கடிதம் எழுதி வைத்து பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொன்டுள்ளார் சென்னையை அருகே 11ஆம் வகுப்பு மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பாலியல் தொல்லையால் நடக்கும் முதல் தற்கொலை இது கிடையாது, கடந்த மாதம், கரூர் மாவட்டத்தில் 17 வயது மனைவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கரூர் சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு முன்பு , கரூர் நகர் பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு வந்த மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்ற டாக்டர் ரஜினிகாந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், இதே போன்று கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொந்தரவு காரணமாக மாணவிகள் தற்கொலை சம்பவம் ஒரு பக்கம் அரங்கேறி கொண்டிருக்க மறுபக்கம் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி ஒருவர் மர்மமான முறையில் சமீபத்தில் தமிழகத்தில் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்று தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய காவலதுறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஆடு திருடர்களால் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலை கொல்லை சம்பவங்கள் பற்றி தமிழக காவல் துறை டிஐஜி யை நேரில் அழைத்து இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

மாரிதாஸ் விடுதலை சாத்தியமா.? மாரிதாஸ் மீது குண்டர் சட்டமா.? CRPC சட்டம் நடைமுறைக்கு சாத்தியமா.?
கார்த்திக் வெங்கடாஜலபதி
இந்து வழக்கறிஞர் முன்னனி மாநில செயலாளர்