இன்றைய (19-12-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
நீண்ட நாட்களாக இருந்துவந்த செயல்களில் தடை, தாமதங்கள் நீங்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : தாமதங்கள் நீங்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வாக்குசாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர்வான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

மிதுனம்
வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

கடகம்
புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், சிறு சஞ்சலங்களும் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்மம்
உயர்கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : மேன்மையான நாள்.

கன்னி
எந்தவொரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளில் மனக்குழப்பங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆதரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.

துலாம்
தந்தைவழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பண வரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
மனதில் ஒரு விதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : குழப்பமான நாள்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : விவேகம் வேண்டும்.

தனுசு
வியாபார பணிகளில் வருமானம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான புதிய வேலைவாய்ப்புகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : ஆசைகள் பிறக்கும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வீடு கட்டுவது தொடர்பாக எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

கும்பம்
உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
சதயம் : ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

மீனம்
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : நன்மையான நாள்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.
ரேவதி : இழுபறிகள் மறையும்.