திமுகவின் கருப்பு பணம் ஜாக்கி வசமா.? திமுக – ஜாக்கி வாசுதேவ் தொடர்பு பற்றி பகிரங்கமாக வெளியிட்ட சவுக்கு சங்கர்.!

0
Follow on Google News

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் திமுக அரசு மற்றும் ஜாக்கி வாசுதேவ் இருவருக்கு இடையில் இருக்கும் தொடர்பு பற்றி பேசியதாவது, 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போதுதான் ஜக்கி வாசுதேவ் முதன் முதலில் அரசியல் தொடர்பு ஏற்பட்டது. நக்கீரன் காமராஜர் முதன்முதலில் ஜக்கிவாசுதேவ் உடன் தியானம் பயிற்சிக்கு செல்கிறார், அதன் பின்பு ஜாக்கி வாசுதேவின் தீவிர பக்தர் ஆகிறார். இதன்பின்பு ஜக்கிவாசுதேவ் அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார் நக்கீரன் காமராஜர்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நக்கீரன் காமராஜரிடம் அரசியல் குறித்து பேசும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. அப்போது ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் செல்லும் வழியில், வனப்பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று இருந்தது. இந்த சோதனை சாவடியை அகற்ற அப்போது நக்கீரன் காமராஜரிடம் உதவியை நாடியுள்ளார் ஜக்கிவாசுதேவ்.

உடனே அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இதுகுறித்து தெரிவித்த நக்கீரன் காமராஜர், அந்த சோதனை சாவடியை அகற்றுவதற்கான வேலைகளை செய்து முடித்தார். மேலும் அப்போதைய திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை இருந்தபோது ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்திற்கு மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழி செய்தது திமுக ஆட்சி.

இதன் பின்பு நக்கீரன் காமராஜர், ஜக்கிவாசுதேவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அழைத்து அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி ஆகியோருடன் இணைந்து மரம் நடும் விழாவை நடத்தினார், இப்படித்தான் திமுக உதவியுடன் ஜக்கிவாசுதேவ் வளர்ந்தார். மேலும் அமைச்சர் கே என் நேரு அவர்களின் தம்பி மறைந்த ராமஜெயம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர், அவர் தான் ஜக்கி வாசுதேவ் பெருமளவு இடம் வாங்குவதற்கு உதவி செய்தார்

மேலும் அரசியல்வாதிகளின் கருப்பு பணங்கள் பாதுகாப்பாக ஜக்கிவாசுதேவ் அவர்களிடம் இருப்பது அரசியல்வாதிக்கு வசதியாக இருக்கும். இதில் திமுகவின் கருப்பு பணம் அங்கே இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். திமுக அரசுக்கு ஜக்கி வாசுதேவ் மீது அச்சம் உள்ளது. அதன் காரணமாகத்தான் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த போது திமுக தலைமையினர் இனி வாசுதேவ் பற்றி ஏதும் பேச வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கலாம் என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.