மாநாடு வெற்றியால் வெங்கட்பிரபுவுக்கு கிடைத்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் இயக்குனர் பட்டியலில்!.

0
Follow on Google News

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது. படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீளமாக உள்ள நிலையில் அதில் வெங்கட்பிரபுவின் பெயரும் புதிதாக இப்போது இடம்பெற்றுள்ளதாம். ஒருவேளை ரஜினி அவரை அழைத்து கதைக் கேட்டு அவருக்குப் பிடித்துப் போய்விட்டால் விரைவில் அடுத்த கட்ட வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.