மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் IAS..? பின்னணியில் கிறிஸ்துவ அமைப்புகள்.?

0
Follow on Google News

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். இதனை தொடர்ந்து சகாயம் அரசியலில் நுழைய இருப்பதால் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது, மேலும் தமிழகம் முழுவதும் பல அரசு அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்றி வருகையில் சகாயம் ஐ.ஏ.எஸ். திட்டமிட்டு விளம்பரம் செய்யப்பட்டது மர்மமமாகவே இருந்தது.

ஆனால் சகாயம் ஐ.ஏ.எஸ். எதிர்காலத்தில் தமிழக அரசியலில் ஈடுபடுத்தபட அவர் பின்னனியில் சில குழுவினர் இயங்குவதாகவும், அவரை அவர்கள் தான் திட்டமிட்டு விளம்பரம் செய்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதியே விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்திருந்த போதும், அது தொடர்பாக முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன்பே அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது, தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வருகிறது, இந்த நிலையில் திமுக தங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்பதால் கிருஸ்துவ அமைப்புகளிடம் இருந்து பெரும் தொகை திமுகவுக்கு தேர்தல் நிதியாக தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின் போது கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் திமுகவுக்கு பணம் கொடுத்து அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக நாம் முயன்று வருவதற்கு நம்மில் ஒருவர் ஆட்சிக்கு வர ஏன் முயற்சிக்க கூடாது என முடிவு செய்த கிருஸ்துவ அமைப்புகள் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ளதாக கூறபடுகிறது, வருகின்ற 2021 தேர்தலில் நமக்கு ஓரு தொடக்கமாக இருக்கும் 2026 நம்மில் ஒருவர் தமிழக்தில் முதல்வராக அமர்ந்து விடுவார் என கிருஸ்துவ அமைப்புகள் முடிவு செய்து சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை பின்னின்று இயக்குவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், ஒவைசி, திருமாவளவன் ஆகியோர் ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் ஐ.ஏ.எஸ். முன்னிறுத்தப்படலாம் என கூறபடுகிறது, மேலும் இந்த மூன்றாவது அணியில் இடப்பெறும் கட்சிகள் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் பெரும் நிதி உதவி செய்ய கிருஸ்துவ அமைப்புகள் தயாராக இருப்பதாக கூறபடுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .