பிரதமர் மோடியின் ராஜதந்திரம்…. எரிசக்தியில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை… மக்களே எந்த பதற்றமும் வேண்டாம்…

0
Follow on Google News

மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகியுள்ள பதற்றம் உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தனது வலுவான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தூதரக நடவடிக்கைகளால் உறுதியான நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு தசாப்தமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்கலையே அதிகமாக சார்ந்திருந்த இந்தியா, இன்று உலகளாவிய எரிசக்தி வலையமைப்பில் முக்கிய பங்காற்றும் நாடாக மாறியுள்ளது.

குறிப்பாக இன்று இந்தியா உலகில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாகவும், நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடாகவும், ஐந்தாவது பெரிய பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடாகவும் இந்தியா திகழ்கிறது. உலகளாவிய பதற்றங்கள் ஏற்பட்டாலும் இந்தியாவின் எரிசக்தி தேவைகள் பாதிக்கப்படாத வகையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவிடம் சுமார் 7 முதல் 8 வாரங்களுக்கு போதுமான அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 250 மில்லியன் பேரல்களுக்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்புகளை இந்தியா வைத்திருப்பதுடன், நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு சுமார் 258 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இது இந்தியாவின் உள்நாட்டு தேவையை விட அதிகமாக இருப்பதால், உலகளாவிய மாற்றங்களையும் சமாளிக்கும் திறன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகித்த ஹோர்முஸ் கடல்சரிவு மீது மிகுந்த சார்பு இருந்தது. ஆனால் இன்று இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் சுமார் 40 சதவீதம் மட்டுமே ஹோர்முஸ் வழியாக வருகிறது; மீதமுள்ள 60 சதவீதம் மாற்று பாதைகள் மூலம் வருகிறது.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. சமீப காலங்களில் ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய பங்காக மாறியுள்ளது. அதேபோல் லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா போன்ற நாடுகளுடனும் இந்தியா புதிய எரிசக்தி கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு வழங்கலை அதிகரிக்க முன்வந்துள்ளன. இது உலக எரிசக்தி சந்தையில் இந்தியாவின் நிலை உயர்ந்திருப்பதை காட்டுகிறது.

உலக அரசியல் குழப்பங்களின் நடுவிலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முக்கியமானதாக உள்ளது. இந்த சமநிலையான வெளிநாட்டு கொள்கை இந்தியாவிற்கு உலகளவில் நம்பகத்தன்மையை பெற்றுத் தந்துள்ளது. உலகளாவிய பதற்றம் அதிகரித்தாலும், இந்தியாவின் வலுவான எரிசக்தி பாதுகாப்பு, பல்துறை வெளிநாட்டு கொள்கை மற்றும் செயலில் இருக்கும் தூதரக நடவடிக்கைகள் காரணமாக நாடு உறுதியான நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன் மூலம், உலக நெருக்கடிகளின் மத்தியில் இந்தியா ஒரு பொறுப்பான மற்றும் நிலைத்தன்மை கொண்ட உலக சக்தியாக உருவெடுத்து வருகிறது.