அர்னாப் மீது போலீசார் தாக்குதல்.! தமிழக பத்திரிகையாளர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பதில் மர்மம் என்ன.?

0
Follow on Google News

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று அவரது இல்லத்தில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று அவரை தாக்கி வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றது.இது மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா கட்சியின் திட்டமிட்ட பழிவாங்கல் என கூறபடுகிறது.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைதை கண்டித்து அவருக்கு ஆதரவாக indiawitharnap என்ற ஹாஸ்டக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, சில மாதங்களுக்கு முன் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தபோது.

அந்த ஊழியர்கள் மீது தொலைக்காட்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்த போது கடுமையாக குரல் கொடுத்தவர்கள் இன்று சக பத்திரிகையாளர் ஒருவரை அவர் வீடு புகுந்து அடித்து காவல் துறை கைது செய்தது குறித்து, தமிழக முன்னனி ஊடகவியலார் யாரும் வாய் திறக்கவில்லை, இதன் பின்னனியில் பாஜக ஆளும் மாநிலத்தில் ஏதேனும் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால் தமிழகத்தை சேர்ந்த முன்னனி ஊடகவியாளர்கள் கண்டனம் கொடுத்திருப்பார்கள், ஆனால் தற்போது காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆளும் மாநிலம் என்பதால் மௌனமாக இருக்கின்றனர்,என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.