பாஜகவின் வேல் யாத்திரை எதிரொலி.! முருகனை தமிழ் கடவுளாக ஏற்று கொண்ட கனிமொழி.! பகுத்தறிவுக்கு வந்த சோதனையா.?

0
Follow on Google News

தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருக கடவுளை வழிபடக்கூடிய கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்து கறுப்பர் கூட்டம் என்கிற Tube channel வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த கருப்பர் கூட்டம் என்கிற you tube சேனல் பெரியாரிஸ்ட் வாதிகளால் நடத்தப்பட்டது, மேலும் கறுப்பர் கூட்டத்தின் முக்கிய குற்றவாளியான செந்தில் வாசன் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திமுக ஐடி பிரிவில் பணியாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கறுப்பர் கூட்டம் விவகாரத்தை கண்டிக்கும் விதத்தில், தமிழகம் முழவதும் தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக இந்துக்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவு அளித்த வந்த சில அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக இந்துக்களின் எழுச்சியை கண்டு கறுப்பர் கூட்டத்துக்கு தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அந்தர் பல்டி அடித்தனர்

இந்நிலையில் தற்போது தமிழக முழுவதும் வெற்றி வேல் யாத்திரை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது, வருகிற நவம்பர் 6ஆம் தேதி தொடங்கும் இந்த வெற்றிவேல் யாத்திரை அடுத்த மாதம் டிசம்பர் 6அம் தேதி முடிகிறது, இதற்கான ஆயத்த பணியில் தமிழக பாஜக ஈடுப்பட்டு வரும் நிலையில், இந்த வெற்றிவேல் யாத்திரை நடத்த தடை விதிக்க திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது, ஆனால் திட்டமிட்டபடி வெற்றிவேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார், இதனை தொடர்ந்து தன்னை இதுவரை பகுத்தறிவாதியாகவும், கடவுள் இல்லை என முழங்கிய பெரியார் கொள்கையை பின்பற்ற கூடிய பெரியாரிஸ்டாக கட்டி கொண்ட கனிமொழி. இந்துக்கள் வழிபடக்கூடிய முருகனை தமிழ் கடவுள் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

தமிழக இந்துக்களின் எழுச்சி கடவுளே இல்லை என்று இதுவரை மேடை தோறும் கூறி வந்தவர்கள் முருகனை தமிழ் கடவுளாக ஏற்று கொண்டுள்ளது, என்னடா இது பகுத்தறிவாதிகளுக்கு வந்த சோதனை என தமிழக மக்கள் கேலி கிண்டல் செய்து வருவது குறிப்படத்தக்கது.