அண்ணாமலை பக்கம் 8 பாஜக முக்கிய தலைவர்கள்… 3 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… 5 IAS , IPS அதிகாரிகள்…

0
Follow on Google News

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதியதாக அமைப்பு தொடங்கிய மிக குறுகிய நேரத்திலே சுமார் 15 லட்சம் பேர் இணைந்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியலில் சினிமா பின்புலம் இல்லாமல் இப்படி மக்கள் அன்னமலையை ஆதரித்து அவர் தொடங்கிய அமைப்பில் இணைந்து கொள்வது இதுவே முதல் முறையாகும், இது ஆண்ட திராவிட கட்சிகளை மட்டுமில்லை, ஆண்டு கொண்டிருக்கு முதல்வர் விஜய்க்கு கடும் பீதியை கிளப்பி இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பலரும் எதிர்பாரத வகையில் தமிழகத்தில் மிக பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. இதில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் முதல்வர் விஜய்க்கு எதிரான போட்டியாளர் என்கிற பரபரப்புக்கு மத்தியில் அதற்கு சரியான நபர் அண்ணாமலை தான் என்பது பெரும்பாலான மக்களின் தேர்வாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பு தொடங்கியுள்ளது, பாஜகவுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என பாஜகவில் இருக்கும் சில தலைவர்கள் பேசினாலும், பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள், அந்த வரிசையில் கரு நாகராஜன், சுமதி வெங்கடேசன், பழனி கனகராஜ், மதுரையில் இருந்து மகா சுசீந்திரன் போன்ற பல பாஜக முக்கிய தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கிய புதிய அமைப்பில் தங்களை இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜகவில் இருக்கும் ஒரு சில தலைவர்கள் கூறுவது போன்று, பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது எந்த பாதிப்பும் இல்லை என்பது அரசியலில் ஏற்று கொள்ள முடியாத வாதும், நிச்சயமாக பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது, தமிழக பாஜகவுக்கு மிக பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த சேதாரத்தை சரி செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக தள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

இந்நிலையில் பாஜகவில் மாநில அளவில் உள்ள முக்கிய தலைவர்கள் 8 பேர் அண்ணாமலை உடன் நல்ல தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் எதிர்கால அரசியல் அண்ணாமலையை நோக்கி நகரும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக என்கிற கட்சி தற்பொழுது அசத்தவனமாகி கொண்டிருக்கும் நிலையில், தங்கள் அரசியல் எதிர்காலம் கருதி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்று அரசியல் கட்சியை தேட தொடங்கியுள்ளனர்.

இதில் சமீபத்தில் தவெக வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுந்த மரியாதையை அக்கட்சி கொடுக்க வில்லை என்றும், குறிப்பாக விஜய்யை சந்தித்து இணைய நினைத்த அவர்களுக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை, புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தான் தங்களை தவெக வில் இணைந்து கொண்டனர், இதனால் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து தவெக பக்கம் செல்ல நினைத்தவர் அண்ணாமலை உடன் இணைந்தால் தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் என அண்ணாமலை பக்கம் திரும்பியுள்ளார்.

இதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் விரைவில் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அமைப்பில் தங்களை இணைந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஓய்வு பெற்ற IAS மற்றும் IPS அதிகாரிகள் பலரும் அண்ணாமலை உடன் பேசி வருவதாகவும், எதிர்காலத்தில் தங்களை அண்ணாமலை தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் களம் இறங்க இருப்பதாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் வல்லுநர்கள், அடுத்து வரும் பொதுதேர்தலில் விஜய் – அண்ணாமலை இருவருக்கும் இடையில் தான் மிக கடுமையான போட்டியாக இருக்கும் என கணித்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here