பட்டியல் சமூக கண்ணீரை துடைத்த நயினார்… நிமிடத்திற்கு நிமிடம் போராடிய மாவட்ட தலைவர்… பாஜக பக்கம் திரும்பிய ஒட்டு மொத்த பட்டியல் சமூகம்…

0
Follow on Google News

மதுரை பெருங்குடி கிராமத்தில் சுமை 50 வருடங்களாக பட்டியல் சமூக மக்கள் குடியிருந்த பகுதிகளை, ஆக்கிரமிப்பு என அவர்கள் குடியிருந்த பகுதிகள் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதி பாஜக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் நிலை குறித்து பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் கவனத்திற்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்து உடனே பாதிக்க பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் இறங்கினார் சிவலிங்கம்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கவனத்திற்கு பெருங்குடி பட்டியல் சமூகம் மக்கள் சுமார் 50 வருடமாக குடியிருந்த வீடுகள் அகற்றப்பட்டது விவகாரம் நயினார் கவனத்திற்கு எடுத்து சென்றார் மாவட்ட தலைவர் சிவலிங்கம். இதற்கு முன்பு மதுரை வந்த நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பட்டியல் மக்கள் சார்பாக அவர்களின் பிரச்சனையை தெரிவித்தவர்கள், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தனர்.

உடனே இது தொடர்பாக மதுரை ஆட்சியரை சந்திக்க பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கத்தை வலியுறுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேரடியாக அபாதிக்கப்பட்ட பெருங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூக மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை நேரடியாக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தலின் படி மாவட்ட தலைவர் சிவலிங்கம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்து சென்று, பட்டியல் சமூக மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார், தொடர்ந்து அடுத்தடுத்து இது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவரை தொடர்ப்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெருங்குடி கிராம பட்டியல் சமூக மக்களுக்கு தீர்வு காண தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் நயினார் நாகேந்திரன்.

இந்நிலையில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை அழைத்து கொண்டு தாலுகா அலுவலகம், ஆர் டி ஓ அலுவலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம், மேலும் பெருங்குடி பகுதியிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிலவலிங்கத்திடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த சம்பவமும் அரங்கேறியது . இப்படி பாஜகவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினருக்கு தீர்வு காண போராடி வந்த நிலையில்.

பாஜக மாநில தலைவர் நயினார் நயினார் நாகேந்திரன் தொடர் முயற்சியால் சுமார் 100 க்கு மேற்பட்ட பெருங்குடி கிராமத்தை சேர்த்த பட்டியல் சமூக மக்களுக்கு பட்டா கிடைத்து இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் குடியிருந்த பகுதியில் அரசு பள்ளி வர இருப்பதால் மாற்று இடத்தில் பட்ட வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மதுரையில் நயினார் நாகேந்திரனை சந்தித்த பெருங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தினர் பட்டா கிடைக்க முயற்சி செய்த நயினார்க்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினருக்கு பட்டா கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நயினார் வழிகாட்டுதலில் படி தொடர்ந்து களத்தில் போராடி வந்த மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் மதுரை பாஜகவினர்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் , தற்பொழுது பெருங்குடி பட்டியல் சமூக மக்களின் பட்டா பெற்று கொடுத்தது என மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து பாஜக வளர்ச்சிக்கு மிக பெரிய பங்காற்றி வருகிறார் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.