மோடி அவருடைய பொஞ்சாதி கூட..! ஸ்டாலின் முன்னிலையில் கீழ்த்தரமாக பேசிய பாதிரியார் எஸ்ரா.சர்குணம்.!

0
Follow on Google News

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில், திமுக தலைவர் முக ஸ்டாலினை மேடையில் வைத்து கொண்டு, பிரதமர் மோடி குறித்து மிக கீழ்த்தரமாக கிருஸ்துவ பாதிரியார் எஸ்ரா.சற்குணம் பேசியுள்ளது பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. போராட்டத்தில் மேடையில் பேசிய எஸ்ரா.சர்குணம்,இங்கே நாம் பேச கூடிய குரலானது டெல்லியிலேயே எதிரொலிக்க வேண்டும், மோடியின் காதிலேயே போய் விழ வேண்டும்.

மோடி இந்த நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர், அவர் அடிக்கும் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார், நாலு பணக்காரர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான் அவருடைய கடமை, ஏழைகளைப் பற்றி அவருக்கு கவலையே இல்லை, ஆனால் முழு நேரம் பேசுவது நான் ஒரு ஏழையாக பிறந்தவன், டீ விற்று கொண்டு இருந்தவன், நான் வாழ்வதெல்லாம் ஏழைகளுக்கு தான் என்று சும்மா ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிர்.

ஆனால் அன்பர்களே அதற்கு எதிர்மறையான காரியங்களை தான் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம், அவர் கடவுளுக்கு பயந்து இருந்தால் கூட மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டார், கடவுளைப் பற்றி தான் பேசுவார் ஆனால் கடவுள் பயம் கிடையாது, ஒரு மனித திருமணம் செய்து பொஞ்சாதி கூட ஒரு அஞ்சு நாளாவது வாழ்ந்தால் தானே கஷ்டம் நஷ்டம் தெரியும், திருமணம் செய்து ஒரு வாரம் கூட பொஞ்சாதி வாழ முடியாதவர், இந்த நாட்டை ஆழ என்ன தகுதி இருக்கு.?

இத்தகைய போலியான ஒரு ஆள், மோடி இந்த நாட்டில் இருந்து அகற்றப்படும் வரை நமக்கு கஷ்டங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்,அவருக்கு கஷ்டம் நஷ்டம் என்று தெரியவில்லை புள்ள குட்டிகளோட வாழ்ந்தால் தானே தெரியும் மனுஷனுக்கு, யார் கூட வாழ்ந்தார் என்று தெரியவில்லை, மோடி இந்த நாட்டில் இருந்து ஒழிய வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்வோம் என எஸ்ரா.சர்குணம் பேசிய பேச்சு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், நாலு தமிழ் சொல் தெரியுமென்பதால், நாகரிகத்தை மறந்து , சேராத இடம் சேர்ந்து, தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம்? தன் வாழ்வையே நாட்டிற்கு அர்ப்பணித்து விட்ட பாரத பிரதமர் மோடி பற்றி பேச இந்த மேடையில் இருக்கும் ஒருவருக்காவது தரம் இருக்கிறதா? தமிழ்நாடு இனியும் தாங்காது என தெரிவித்துள்ளார்.