அமைச்சர் PTR எடுத்த திடீர் முடிவு… பெரும் சிக்கல் திமுக… முடிவுக்கு வருகிறது திமுக ஆட்சி…

0
Follow on Google News

ஒவ்வொரு மாதம் பிரதியில் அரசியல் கள நிலவரம் குறித்து ஆங்கில ஊடகங்கள் இணைந்து சில கருத்துக்கணிப்புகளை எடுப்பதை வழக்கமாக வைத்து வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்புகளை எடுத்திருக்கிறது ஆங்கில ஊடகங்கள் இணைந்து. அதில் கடந்த 2001ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மக்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கை சரிய விடாமல் தக்க வைத்து வந்தது திமுக.

ஆனால் சமீபத்தில் திமுக அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி, இருவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது, அதனை தொடர்ந்து டாஸ்மாக் மூலம் நடந்த மிகப்பெரிய ஊழலை அமலாக்கத்துறை வெட்ட வெளிச்சம் ஆக்கியது. மேலும் பல்வேறு காரணங்களால் திமுக மீது தமிழக மக்கள் கட்டும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும், குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சுமார் 52 சதவீதம் தமிழக மக்களிடம் இருந்த ஆதரவு தற்பொழுது குறைந்து 39 சதவீதமாக என்கின்ற ஆங்கில ஊடகங்கள் எடுத்த அந்த கருத்து கணிப்புகால்.

இந்த கருத்து கணிப்பு குறித்த தகவல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து இன்னும் ஆட்சிக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில் விழுந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியாக தான் சமீபத்தில் தஞ்சாவூரில் முதல்வர் மு க ஸ்டாலின் ரோட் ஷோ நடத்தியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முதல்வர் மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் 234 தொகுதிகளுக்கும் சென்று வந்து விட வேண்டும் என முதல்வர் தரப்பிலிருந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் திமுக 39 ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் அரங்கேறியுள்ளது என்பதை தெரிவித்திருந்த நிலையில், இதற்கு முன்பு ஈடிக்கும் பயமில்லை மோடிக்கு பயமில்லை என்று வீர வசனம் பேசிய உதயநிதி ஸ்டாலின் எங்கே என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபகாலமாகவே உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருந்து வரும் நிலையில் திமுக உள்ளேயும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு குழுவில் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராமல் கீழே முன்வரிசையில் அமைந்திருந்தார். அதேபோன்று திமுக சார்ந்த ஊடகங்களிலும் அவர் சார்ந்த செய்திகளுக்கு தற்பொழுது முக்கியத்துவம் இல்லை

மேலும் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தக்கூடாது என்கின்ற இடைக்கால தடையை எதிர்த்து வரும் இந்த வாரம் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பதிவு தாக்கல் செய்ய இருப்பதால் விரைவில் இடைக்கால தடை நீங்கி அமலாக்க துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் திமுகவில் மிக நேர்மையான அமைச்சர், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற அரசியலில் மிக தூய்மையானவர் என்று மாற்று கட்சி காரர்களால் பாராட்ட கூடிய அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வில்லை என்றும், அவர் அமெரிக்கவில் உள்ள அவருடைய தொழிலை கவனிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வில்லை என்றால் அது திமுகவுக்கு பலத்த அடியாக வரும் சட்டசபை தேர்தலில் இருக்கும், PTR மீது உள்ள அனுதாபம் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகளாக மாறும், எதிர்க்கட்சிகளும் PTR யை மையப்படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் என்கிறது அரசியல் களம்.