ராகுலிடம் தொலைபேசியில் கண்ணீர் விட்டு அழுத கே.எஸ் அழகிரி.! திமுக கூட்டணியில் இருந்து உடனே வெளியேற ராகுல்காந்தி உத்தரவு.!

0
Follow on Google News

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது, இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறுவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, திமுக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவனம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக முழுவதும் நடத்திய ஆய்வு ரிபோர்ட் திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் கூட தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும், ஆகையால் வரும் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளுக்கு மிகாமல் திமுக போட்டியிட வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவு தொகுதிகளை ஒதுக்கினால் போதும் என அந்த ஆய்வு ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதன் பின்பு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து தானாக வெளியேற்றுவதற்கான அணைத்து வேலைகளை திமுக தொடர்ந்து செய்து வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பலமுறை ராகுல் காந்தி தமிழகம் வந்த போது உரிய மரியாதையை கொடுக்க தவறி விட்டது திமுக மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க மாட்டோம் என டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளது திமுக. ராகுல் காந்தி பலமுறை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு முயன்றும் திமுக தகுந்த பதில் அளிக்காமல் உதாசீன படுத்தி வந்தது, இதனை தொடர்ந்து கடந்த மாதமே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி முன்றாவது அணி அமைக்க தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நாங்கள் திமுகவிடம் பேசி கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற தொகுதிகளை போன்று இம்முறையும் பெற்று தருவோம் என தெரிவித்துள்ளார்கள், இதன் பின்பு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு சென்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு தகுந்த மரியாதையை கொடுக்க திமுக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது, இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கே.எஸ் அழகிரி தனக்கு நடத்த அவமான பற்றி கட்சி நிர்வாகிகளிடம் தேம்பி..தேம்பி அழுத செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து கூட்டணி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு திமுகவிடம் இருந்து இதுவரை அழைப்பு வராத நிலையில், ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து கே.எஸ் அழகிரியிடம் இதற்கு முன் நடத்த பேச்சுவார்த்தை பற்றி கேட்டுள்ளார், அதற்கு தனக்கு நடந்த அவமானம் பற்றி கண்ணீர் விட்டு அழுதபடியே கூறியுள்ளார் கே.எஸ் அழகிரி, உடனே தொலைபேசியில் சமாதனம் செய்த ராகுல் காந்தி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணியை அமைக்க உங்களிடம் ஏற்கனவே வலியுறுத்தினேன் நீங்க தான் கேட்கவில்லை என தெரிவித்த ராகுல்காந்தி.

கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருங்க, மூன்றாவது அணியில் இடம்பெறுவது பற்றி நானே சம்பந்த பட்ட கட்சிகளிடம் பேசுகிறேன் என தெரிவித்துள்ளார், அதற்க்கு வரும் 9 தேதி வரை திமுகவிடம் இருந்த நல்ல தகவல் வருகிறதா என காத்திருப்போம் என தெரிவித்த கே.எஸ்.அழகிரி அதற்கு பிறகு முன்றாவது அணி பற்றிய முடிவை எடுப்போம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா.? இல்லையா? என்பது தெரிவித்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .