நான் தயார்… உங்க மாமா முக.ஸ்டாலின் அனுமதிப்பாரா? வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தயாநிதிமாறன்..!

0

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று புதியதாக கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ஒரே கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தஞ்சாவூரில் தமிழக பா.ஜ.க.வின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க. உண்ணாவிரதம் அறிவித்துள்ளது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று கூறுகையில்.

யார் உண்ணாவிரதம் இருந்தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை.காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி உள்ளார்.இதற்கு திமுக எம்பி தயாநிதி மாறன், தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.

தயாநிதிமாறன் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள் மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி. தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா முக ஸ்டாலின் அனுமதிப்பாரா? என அண்ணாமலை தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலையை தூதுவராக அனுப்ப எப்போது சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருவீர்கள் என்றும், உங்கள் மாமா முதல்வர் முக ஸ்டாலின் அனுமதி தருவாரா என்றும் தயாநிதிமாறனிடம் வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும் வாயை கொடுத்து தேவையில்லாமல் வாங்கி கட்டிக்கொண்ட தயாநிதிமாறனை, என்ன தயா இதெல்லாம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.