தலித் பெண் மீது கடும் தாக்குதல்.! ஸ்டாலின் மீது பாய்கிறதா வன்கொடுமை சட்டம்.?தமிழக அரசியலில் பரபரப்பு.!

0
Follow on Google News

கோவையில் நடைபெற்ற திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில் தலித் பெண் மீது ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் நடத்திய தாக்குதல் வீடியோ தமிழகம் முழுவதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மக்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் பேசி வருகிறார்,

அதே போன்று கோவையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் நகை கடன் ரத்து செய்யப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னிங்க செஞ்சீங்களா என கேள்வி எழுப்ப, நீ அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் உனக்கு பதில் சொல்ல முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார், ஆனால் அந்த பெண் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.

உடனே அங்கே இருந்த திமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய எந்த தலித் பெண்ணை தாக்க முற்பட்டனர், அதில் ஒருவர் அந்த பெண்ணின் முதுகில் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது, மேலும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கே இருந்து வெளியில் திமுகவினர் இழுத்து சென்றபோது, திமுக ஒழிக.! நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை, சுதந்திர தினம், குடியரசு தினம் தெரியவில்லை உங்களுக்கு என்ன தகுதி இருக்கு முதல்வராக என தொடர்ந்து அந்த பெண் கோஷமிட்டு சென்றார்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வெளியில் இருந்த திமுகவினர் அந்த தலித் சமூகத்தை சேர்ந்த பெண் மீது தாக்குதலில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அந்த தலித் பெண்ணை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி சென்றனர், இதனை தொடர்ந்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய தலித் சமூகத்தை சேர்ந்த பெண் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோ ஆதாரமாக உள்ளதால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தாக்குதலுக்கு ஆளான தலித் பெண் தரப்பினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் முக்கிய வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளான பெண்ணுடன் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து தாக்குதலை நடத்திய திமுகவினர் யார் என்பதை வீடியோ காட்சி உதவியுடன் கண்டறிந்து அவர்கள் மீதும், இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தீவிர ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது, ஏற்கனவே திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் வன்கொடுமை சட்டத்தில் சிக்கியது குறிப்படத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .