பெண் போலீசார் அடி தாங்க முடியாமல் விடுதலை சிறுத்தைகள் தெறித்து ஓட்டம்…! கைகொட்டி சிரிக்கிறார்கள் என திருமாவளவன் வேதனை..!

0
Follow on Google News

சேலம் மாவட்டம் மோரூர் பேருந்து நிலையம் அருகில் விடுதலை கட்சி கொடி கம்பம் நட்டு அங்கே கொடி ஏற்றுவதற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்தனர், ஆனால் அங்கே விடுதலை சிறுத்தை கட்சி கொடியை ஏற்றுவதற்கு காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக கூறபடுகிறது, காவல் துறை அனுமதியை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடி ஏற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது, அங்கே காவல் பணியில் பெரும்பாலும் பெண் போலீசாரும் இருந்துள்ளனர், ஒரு கட்டத்தில் தற்போது தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சி தான், கொடியை ஏற்றியே தீருவோம், முடிந்தால் தடுத்து பாருங்கள் என போலீசாருக்கு எதிராக விசிகவினர் கோஷமிட்டதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காவல் துறை தரப்பில் இருந்து லேசான தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த தடியடியில் போது பெண் போலீசார் நடத்திய தடியடியில், அடி தாங்க முடியாமல் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெறித்து ஓடியதாக கூறபடுகிறது. இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது. சில நேரங்களில் விசிக கொடியேற்றுவதே ஒரு போராட்டமாக மாறுகிறது. பல கட்சிகளின் கொடிகள் பறக்குமிடத்தில் விசிக கொடியைப் பறக்கவிட அவ்வப்போது ஒரு யுத்த களத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.

சாதிப் பித்தர்களும் காவல் துறையினரும் கைக் கோர்த்துக்கொள்கின்றனர். நேற்று(செப்23)சேலம் ஓமலூர் அருகே.. கடந்த இரு வாரமாக விசிக கொடியை ஏற்றவிடாமல் நெருக்கடி கொடுத்தனர். மற்றக் கொடிகளை வேண்டுமானால் அகற்றுகிறோம்; உங்கள் கொடியை ஏற்றக்கூடாதென காவல்துறையினர் வாதிட்டனர். பேருந்து நிலையம் யாவருக்கும் பொதுவான இடம்தானே; எங்கள் கொடியை மட்டும் தடுப்பது ஏனென்று உரிமையை நிலைநாட்ட சிறுத்தைகள்.. திரண்டனர்.

அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறிப் பித்தர்கள் கல்லெறிய, சோடாபாட்டில்களை வீச, காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததோடு, சிறுத்தைகளை மட்டுமே விரட்டியடித்தனர். அத்துடன் 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். சாதிவெறியர்களை அங்கே திரள அனுமதித்தது எப்படி? இது என்ன நீதி? என தெரிவித்த திருமாவளவன், மேலும் சேலம் மாவட்டத்தில் விசிக கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

அவர்களை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசியும் என்னால் முடியவில்லை. பொது இடங்களில் கொடியேற்ற சென்றால் மற்ற காட்சிகளில் கொடியை கூட இறக்கி விடுகிறோம், ஆனால் பொது இடத்தில் விசிக கொடியை ஏற்ற வேண்டாம் என்று காவல் துறை சொல்வதை கேட்டு சாதிவெறியர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் விசிக கொடி ஏற்றுவதில் உள்ள சிக்கல்களையே ஒரு புத்தகமாக வெளியிடலாம் என அவர் வேதனை தெரிவித்தார்.