உங்களுக்கு கணக்கு தெரியுமா.? தெரியாத .? கேள்விக்கு பதில் கூற முடியமால் எரிச்சல் அடைந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்..

0
Follow on Google News

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெட்ரோல், டீசல் வாட் வரி குறைப்பை தற்போது அமல்படுத்துவது கடினமானது என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சாதித்து பேசிய நிதியமைச்சர் மேலும் கூறியதாவது:-

தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் அதில் 4 பைசா மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கிறது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தெரிவித்த நிதியமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறித்து பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது, அதில் ஏதும் தேதி சொன்னாங்களா.? என பதில் கேள்வி கேட்ட பழனிவேல் தியாகராஜன், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க தேதி போட்டாங்களா என மீண்டும் அதே பதிலை, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை பார்த்து கேட்டார்.

அப்போது மற்றொரு பத்திரிகையாளர் அந்த பெண் பத்திரிகையாளர் கேள்வியை விளக்க முயன்ற போது, கோபம் அடைந்த நிதி அமைச்சர், யாராவது ஒருவர் கேள்வி கேளுங்கள், ஏன் அவங்களுக்கு அறிவு பத்தவில்லை என்று நீங்க கேட்கிறீர்களா.? அவங்களுக்கு தான் அறிவு இருக்கு அவங்க கேள்வி கேட்கட்டும் என கோபத்துடன் பதிலளித்த நிதியமைச்சர், உடனே பெண்களுக்கு உரிமை இல்லையா என பேச்சை மாற்றினார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை 5 ஆண்டு ஆட்சியில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுவோம். எனத் தெரிவித்தார்.மேலும் பத்திரிகையாளர் கேட்ட மற்றொரு கேள்விக்கு உங்களுக்கு கணக்கு தெரியுமா.? தெரியாத .? என மீண்டும் எரிச்சல் அடைந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.