கிலோ மாம்பழம் 2 1/2 லட்சம்.. பலத்த பாதுகாப்பில் ஆறு நாய்களும் நான்கு காவலாளிகளும்..! அப்படி அதில் என்ன தான் இருக்கிறது..

0
Follow on Google News

உலகில் உள்ள அனைவரும் ரசித்து ருசிக்க கூடிய ஒரு பழம் என்றால் அது முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் தான். அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒரு மாம்பழம் ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு விலை நீக்கப்படுகிறது. சந்தையில் ஒவ்வொரு ரகத்தைப் பொறுத்து விலை 100 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதில் 2 1/2 லட்சத்திற்கு மேல் ஒரு கிலோ மாம்பழம் விற்பனையாகிறது என்று கேட்டால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகணும்…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சங்கல் பரிஹார், ராணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் தோட்டத்தில் தான் அந்த இரண்டு விலையுயர்ந்த மாமரங்கள் உள்ளது. திருடர்களிடம் இருந்து இந்த விலை உயர்ந்த மாம்பழத்தை தரக்கூடிய மாமரத்தை பாதுகாக்க தான் 6 நாய்களையும், 4 பாதுகாவலர்களையும் நியமித்தது உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகள் வாங்குவதற்காக ரயில் மூலம் மகாராஷ்டிரத்தில் இருந்து சென்னை சென்ற சங்கல்ப் பரிஹார்‌.

அப்போது அங்கு சந்தித்த ஒரு நபர் சங்கல்ப் பரிஹாரிடம் இரண்டு மா மரக்கன்றுகளை கொடுத்து இதை பத்திரமாக வழங்குமாறு கூறியுள்ளார். சங்கல்ப் பரிஹார்‌ அந்த இரண்டு மரக்கன்றுகளையும் பத்திரமாக கொண்டு வந்து மகாராஷ்டிரா மாநிலம் ஜபல்பூரில் உள்ள அவரது பழத் தோட்டத்தில் அதை நட்டு வைத்து அம்மாவின் பெயரை அந்த மாமரத்திற்கு வைத்து வளர்த்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இந்த மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மாங்கனிகள் புதிய வண்ணத்திலும் எடையிலும் வித்தியாசம் ஏற்பட்டதால் தோட்டக்கலைத்துறை மூலம் ஆராய்ச்சி செய்தனர்.

இந்த மாம்பழத்தை தரக்கூடிய மாமரம் ஜப்பான் நாட்டை சேர்ந்த மியாசகி என்ற அரிய வகை மாம்பழம். இந்த அரிய வகை மாம்பழம் கண் சோர்வையும், பார்வை குறைபாட்டை போக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஃ உள்ளதால் சந்தையில் 2 லட்சம் முதல் 3 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகிறது. இந்த விலை உயர்ந்த அரிய வகை மாம்பழத்தின் உண்மையை தெரிந்து கொண்டு சிலர் திருடியுள்ளனர்.

இதனால் இந்த தம்பதியினர், மியாசமி மாம்பழங்களை தரக்கூடிய இரு மரங்களைப் பாதுகாக்க இந்த ஆண்டுமுதல் ஆறு நாய்களையும் 4 பாதுகாவலர்களையும் நியமித்துள்ளனர். இந்த விலை உயர்ந்த மாம்பழம் இவர்களிடம் இருப்பது தெரிந்து பல தொழிலதிபர்கள் போட்டி போட்டு பேரம் பேசி வருகிறார்கள். இந்த மாம்பழத்தின் புகைப்படத்தைப் பார்க்கும் போதே யோசிக்க தோணுது…