திமுக எம்பிக்கள் யார் ஷூவ நக்கி வாங்கினார்கள்.? அநாகரிகமாக கேள்வி எழுப்பியவர்க்கு தக்க பதிலடி கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி..

0
Follow on Google News

நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசுஅமைத்தது. அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்துபுள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தனர். நீட் தேர்வின்தாக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற அறிக்கையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்து வருகிறது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் டாக்டர் ஷியாம் கிருஷ்ணமூர்த்தி தனது சமூக ஊடக பக்கத்தில் , நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ படிப்புகளில் சேரும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை , 2010-14 : 34% , 2015-17 : 49% , 2018-19 : 30% , 2019-21 : 42% என ஏறுமுகமாக தான் ஏ கே ராஜன் அறிக்கையில் இருப்பதை சுட்டி காட்டியவர், இவர்கள் பொங்கும் அளவுக்கு பெரிய மாற்றம் ஏதுவும் இல்லையே…? என்றும்,

மேலும் தமிழ் வழி பயின்றவர்கள், CBSE/ மாநில ஆங்கில வழி பயின்றவர்கள் அளவிற்கு NEET தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே, ஏன்? தமிழ் வழி மாணவர்கள் மட்டும் தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்பதற்கு யார் காரணம்? மாணவர்கள் தமிழால் தாழ்ந்தார்களா? அல்லது திராவிடத்தால் வீழ்ந்தார்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார் ஷியாம் கிருஷ்ணசாமி, இதற்கு திமுக ஆதரவாளர் ஒருவர் பதிலளிக்கையில்,

டேய் கிறுக்கு கூமுட்டை.. நீட் என்பது மெகா ஊழல் னு தெரிஞ்ச பிறகும் முட்டுக்கொடுக்குறீங்களே அப்பனும் மவனும் , நீங்க நீட் இல்லாம தானடா படிச்சு வந்தீங்க.. பார்ப்பான் ஷூ வ நீங்க ஏன் நக்குறீங்க னு தெரியும்.. மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அதானே ? என பொது தளத்தில் அநாகரீமாக பதிலளித்த திமுக ஆதரவாளருக்கு பதிலடி கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி, தம்பி, நீ படிக்கும் போது கூட தான் நீட் இல்லையே, நீ டாக்டர் ஆகிட்டியா இல்ல தற்கொலை செஞ்சுகிட்டியா?

சரி திமுக MPக்கள் 7-8 தனியார் மருத்துவ கல்லூரி வச்சிருக்காங்களே, யார் ஷூவ நக்கி வாங்கியது? ‘பார்பானிடம்’ கூட இல்லாத தனியார் மருத்துவ கல்லூரி்கள் திமுக காரன் கிட்ட எப்படி வந்தது? என தனக்கு அநாகரிகமாக பதிலளித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்து அவர் மேலும் பதில் பேச முடியாதவாறு தெறித்து ஓடும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார் ஷியாம் கிருஷ்ணசாமி. மேலும் பிரபல நெறியாளர் குணசேகரன் தனது டிவீட்டர் பக்கத்தில்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 2019-20-ல் 36 பேரும், 2020-21-ல் 20 பேர் மட்டுமே சேர முடிந்தது துயரம். எளிய குடியில் பிறந்த, முதல் தலைமுறை மாணவர்கள் பல நூறு பேர் இவ்வாண்டில் சேர 7.5% உள்ஒதுக்கீடு வழிவகுத்து இருக்கிறது. உயரப் பறக்கட்டும் சமூகநீதிக் கொடி! என பதிவுக்கு பதிலளித்த ஷியாம் கிருஷ்ணசாமி , இதே ‘துயரம்’ தானே MBBS சேர்க்கையிலும்? அப்போ தமிழக அரசு நடத்தும் 12ஆம் வகுப்பு தேர்வும் – ‘ஏழை, முதல் தலைமுறை, தமிழ் வழி பயின்ற’ மாணவர்களுக்கு எதிரானதா? நீட் தேர்வில் சமூக நீதி இல்ல,சரி 7.5% ஒதுக்கீடு. நீங்க நடத்தும் தேர்வில் தான் சமூகநீதி கொடி கட்டி பறக்குதே? எதற்கு ஒதுக்கீடு? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் ஷியாம் கிருஷ்ணசாமி.