பாஜக உடன் நெருங்கும் திமுக… அமித்ஷா – கனிமொழி பேச்சுவார்த்தை… தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான சீர்மைக்கும் பணிகளை அக்கட்சி தலைமை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்கின்ற பொறுப்பை வழங்குவதற்கான முடிவை மு க ஸ்டாலினும் எடுக்க முன்வந்த போது, அதற்கு சீனியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

கருணாநிதி அவர்கள் திமுக தலைவராக எப்போது அவரால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்கின்ற ஒரு நிலை வந்த போதுதான் உங்களுக்கு செயல் தலைவர் என்கின்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அப்படி இருக்கையில் தற்பொழுது நீங்கள் நன்றாக ஆக்டிவா இருக்கிறீர்கள், அந்த வகையில் தற்போது செயல் தலைவர் என்கின்ற பொறுப்பு அவசியம் அற்றது என்று சீனியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் உதயநிதிக்கு செயல் தலைவர் என்றால் தனக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வேண்டும் என்ற காய்களை ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அகற்றி வந்திருக்கிறார். இப்படி பரபரப்புக்கு மத்தியில் தமிழக முழுவதும் கட்சியை சீரமைத்து இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள், மேலும் இடை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஒரு பக்கம் திமுக இறங்கி இருக்க,

மறுபக்கம் டெல்லி அரசியலை கனிமொழி மூலம் பாஜகவை நோக்கி நகர்த்தி இருக்கிறார் முன்னாள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. வரும் 18ஆம் தேதி பாராளுமன்ற கூட்டம் கூடுகிறது, இப்படி ஒரு சூழலில் மேற்குவங்க மூலம் கூடுதலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைத்திருக்கிறார்கள், மேலும் மகாராஷ்டிராவில் சரத் பவர் தரப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக பக்கம் சிலர் சாய்ந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்னும் 30 முதல் 40 உறுப்பினர்கள் இருந்தால் போதும் நாடாளுமன்றத்தில் பல மசோதாக்களை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றி விடும், ஆகையால் திமுக உதவியும் பாஜகவுக்கு தற்பொழுது தேவைப்படுகிறது. அந்த வகையில் கனிமொழிக்கும் பாஜகவுக்கும் இடையிலான நட்பு என்பது மிக ஆழமானது.

குறிப்பாக தூத்துக்குடியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழிக்கு எதிராக டம்மி வேட்பாளரான தாமாகவே நிறுத்தியது கூட பாஜகவின் டெல்லியின் திட்டம் தான் என்றும், கனிமொழிக்கு கடினமான போட்டியை கொடுக்காமல் மிக எளிமையாக வெற்றி பெற வழி வகுத்ததும் டெல்லி பாஜக தான் என்கின்ற தகவலும் வெளியாகிறது.

குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கனிமொழிக்கும் இடையிலான அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை அடிக்கடி நடக்கும் என்றும், அந்த வகையில் தற்பொழுது காங்கிரசை திமுக கழட்டிவிட்ட நிலையில் பாஜகவை நோக்கி நகர்வதுதான் சரி என்ற முடிவை திமுக தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

குறிப்பாக காங்கிரஸ்க்கும் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் அது பாஜக துணையுடன் தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ள திமுக தலைமை பாஜகவை நோக்கி நகர்வதற்காக கனிமொழி மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த பேச்சுவார்த்தை மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here