ஆதாரங்களை அழித்த திமுக… தோண்டி எடுத்த விஜய்… இனி உருட்டவே முடியாது…

0
Follow on Google News

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய சர்க்காரியா கமிஷன், மிசா குறித்த பேச்சு தமிழகம் முழுவதும் மிக பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது, இதில் மிசா குறித்து ஸ்டாலினை சுற்றியும், சர்க்காரியா கமிஷன் குடித்து கருணாநிதியை சுற்றியும் பல விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய தலைமுறையினர் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து அறிந்து கொள்ளும் வகையில் முதல்வர் விஜய் பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

70 காலகட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி மீது இருந்த ஊழல் குற்றசாட்டுகள் குறித்து அன்றைய மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு நீதிபதி சர்க்காரியா தலைமையில் தனி நபர் ஆணையம் அமைத்து கருணாநிதி மீது உள்ள ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கருணாநிதி மீது இருந்த பல ஊழல் குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்களை கைப்பற்றியது.

அதில் பல கட்டிடங்கள் காட்டியதில் லஞ்சம் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் பூச்சி கொல்லி மருந்து, சக்கரை பேர ஊழல் என பல ஊழல்கள் நடந்ததற்கான ஆதாரத்தை கைப்பற்றியது சர்க்காரியா கமிஷன். இந்நிலையில் சர்க்காரியா கமிஷன் அமைத்து விசாரணையை தீவிர படுத்திய பின்பு, கருணாநிதி – இந்திராகாந்திக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

அடுத்து ஊழல் குற்றசாட்டுகளால் கருணாநிதி தலைமையிலான அரசு 1976ம் ஆண்டு கழைக்கப்டுகிறது, 1977ம் ஆண்டு எம் ஜி ஆர் முதல்வரானார், 1978ம் ஆண்டு மதுரை வந்த இந்திராகாந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டு இந்திராகாந்தி மண்டை பிளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தது கருணாநிதி உடன் இந்திராகாந்தி கூட்டணி அமைக்க முயல்கிறார்.

அப்போது கூட்டணிக்கு வருவதற்கு முன்பு இந்திராகாந்தியிடம் இரண்டு கோரிக்கையை வைக்கிறார் கருணாநிதி, சர்க்காரியா கமிஷனில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும், மேலும் இந்தியா முழுவதும் உள்ள சர்க்காரியா கமிஷன் மற்றும் ஷா கமிஷன் குறித்த ஆவணங்கள் அழிக்கப்பட வேன்டும் என்பது தான் இந்திராகாந்தியிடம் அப்போது கருணாநிதி வைத்த கோரிக்கை என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து எங்கெல்லாம் சர்க்காரியா கமிஷன் மற்றும் ஷா கமிஷன் குறித்த அறிக்கை இருக்கிறதோ அதெல்லாம் தேடி பிடித்து அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எந்த இந்திராகாந்தி திமுகவினரால் தாக்கப்பட்டாரோ, அதே இந்திராகாந்தியை, நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக என்று வரவேற்று கூட்டணி அமைத்தார் கருணாநிதி. அந்த வகையில் சர்க்காரியா கமிஷனில் இருந்து தப்பிக்கவே இந்திரா காந்தியிடம் கூட்டணி அமைத்து இருக்கிறார் கருணாநிதி.

இந்நிலையில் பல இடங்களில் சர்க்காரியா கமிஷன் மற்றும் ஷா கமிஷன் அறிக்கையில் அளிக்கப்பட்டாலும், அதிமுக மூத்த தலைவர் நெடுஞசாலியன் சகோதரர் கோவை செழியன் கைவசம் இருந்த ஷா கமிஷன் ஒரு பக்தியை வைத்து மீண்டும் மறு வெளியீடு செய்கிறார் கோவை செழியன் இதன் பின்பே மீண்டும் சர்க்காரியா கமிஷனின் நடந்த உண்மை இன்றும் அழிக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது.

அந்த வகையில் அப்போதே தன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க தன்னுடைய கட்சி காரர்களை மிசா காலத்தில் தூக்கி போட்ட இந்திராகாந்தியுடனே கூட்டணி வைத்த கருணாநிதி, அதன் பின்பு சர்க்காரியா கமிஷன், மற்றும் ஷா கமிஷன் ரிப்போர்ட்டை அழிக்க முயற்சித்தும் கோவை செழியன் மூலம் பாதுகாக்கப்பட்டது, இன்று 50 வருடங்கள் கடந்தும் சட்டசபையில் முதல்வர் விஜய்யின் வாயிலாக ஒலித்து கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here