தி.மு.க, காங்கிரஸ் ஊறி திளைத்த ஊழல் கட்சிகள்.!எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய பிரதமர்.!

0
Follow on Google News

இன்று தமிழகம், புதுச்சேரி வந்த பிரதமர் மோடி முதலில் புதுச்சேரியில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார். பிறகு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றடைந்தார். அவருக்கு கோவையில் தமிழ் கலாச்சார முறையில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரைதப்பட்டை, சண்டை மேளம், வாழை அலங்காரம், பிளக்ஸ் போஸ்டர் என பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

கோவையில் பிரதமர் மோடி உரையாற்றும் போது முதலில் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழ் மொழியில் உரையாற்றி, அங்கு வந்தவர்களை உற்சாகப்படுத்தினார். தி.மு.க மற்றும் காங்கிரஸும் ஊறி திளைத்த ஊழல் கட்சிகள். தங்கள் சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க – காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மாவட்டம் தோறும் சமூக விரோதிகளை உருவாக்கி மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதே அவர்கள் வேலையாக இருக்கும், என்று எதிர்க்கட்சிகளை தனது உரையால் பந்த் ஆடினார். மேலும் கோவையிலும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர். 8000 கோடி செலவில் நெய்வேலியில் 500 மெகாவாட் திறன் கொண்ட, 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் உருவாக்கப்பட்டது.

அடுத்த திட்டமான நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 3000ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள இந்த திட்டத்தை, 2670 ஏக்கர் பகுதியில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது இந்த இரண்டு திட்டங்களையும் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். தேர்தல் நெருங்கு வதை ஒட்டி பிரதமரே தமிழக பிரச்சாரத்தில் களம் இறங்கியதால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.