உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி.! மூன்றாவது அணி அமைக்க மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி!

0
Follow on Google News

கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று தமிழகம் வந்த ராகுல்காந்தி மீண்டும் வரும் ஜனவரி 23ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். கடந்த ஜனவரி 14ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வந்த போது திமுக சார்பில் எந்த ஒரு தலைவரும் வரவேற்கவில்லை, மேலும் கூட்டணி குறித்து கடந்த சில மாதங்களாக திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், திமுக சார்பில் 15 தொகுதிகள் மட்டும் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடியும், அதுவும் 8 தொகுதிகள் காங்கிரஸ் விருப்பப்படும் தொகுதிகளும் மீதம் உள்ள 7 தொகுதிகளை திமுக தான் முடிவு செய்யும் என திமுக தரப்பில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, ஜனவரி 18ஆம் தேதி புதுச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகளின் கூட்டம் இதுவரை இல்லாத விதமாக அரக்கோணம் எம்.பி தலைமையில் நடைபெறுகிறது. ஜெகத்ரட்சகனே புதுச்சேரி திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றும் அதனால் அவரை முன்னிறுத்தவே அவர் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாகவும் திமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் திமுகவின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியை தானாக கூட்டணியில் இருந்து விரட்டவே இவ்வாறு செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர், இந்த தகவல் காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு சென்றதை தொடர்ந்து, மேலும் கடந்த ஜனவரி 14 ராகுல் காந்தி தமிழக பயணத்தின் போதும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரிடம் திமுக மீது உள்ள அதிருப்தியை தெரிவித்து சென்றுள்ளதாகவும், இனிமே திமுகவை நம்பிக்கொண்டு இருக்க வேண்டாம், மூன்றாவது அணிக்கான வேலையை தொடங்குகள் என தெரிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை அமைதியாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தற்போது மூன்றாவது அணிக்கான வேலையை தொடங்கி விட்டனர், கமல்ஹாசன் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியிருப்பது, முன்றாவது அணிக்கான அறிகுறி தமிழக அரசியலில் தென்பட தொடங்கியுள்ளது, இதனை தொடர்ந்து கமல்ஹாசன், திருமாவளவன், இன்னும் சில காட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணிக்கான வேலை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி. சென்ற முறை போல் அல்லாது சுருக்கமான பயணமாக இல்லாமல் மூன்று நாட்கள் பயணமாக கோவைக்கு வருகிறார், அப்போது முன்றாவது அணிக்காக சில அரசியல் கட்சி தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி தமிழக பயணத்துக்கு பின் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மிக பெரிய விரிசல் உருவாகும் என தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .