SA சந்திரசேகர் தொடங்கிய புதிய கட்சி பின்னனியில் திமுக.! ரஜினியை சமாளிக்க திமுக போட்ட திட்டம் அம்பலமானது.!

0
Follow on Google News

நடிகர் விஜய் தந்தை இயக்குனர் SA சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி பின்னணியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இயக்குனர் SA சந்திரசேகர் அவரின் சினிமா தொடக்க காலகட்டத்தில் இருந்து திமுக அனுதாபியாக இருந்து வருகின்றவர். சன் டிவி கலாநிதி மாறன் தயாரிப்பில் விஜய் நடித்து 2009 ஆம் ஆண்டு வெளியான படம் சுறா, இந்த படம் படு தோல்வி அடைந்து தயாரிப்பு நிறுவனதுக்கு பெரும் நட்டம் ஏற்பட, நடிகர் விஜய் -கலாநிதி மாறன் இடையே மோதல் வெடித்தது.

அப்போது திமுக ஆட்சி என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி நடிகர் விஜய் கடுமையாக மிரட்டப்பட்டார், இந்நிலையில் அடுத்து விஜய் நடித்து வெளியாக இருந்த காவலன் திரைப்படம் திமுகவின் அதிகார பலத்தின் காரணமாக திரைக்கு வருவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொடநாடு சென்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து உதவி கோரினர் விஜய், இறுதியில் ஜெயலலிதா உதவியுடன் திரைக்கு வந்தது விஜய் நடித்த காவலன் திரைப்படம்.

இதன் பின் 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விஜய் நடித்த தலைவா திரைப்படதின் சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கு விற்கப்பட்டதை தொடர்ந்து கடும் கோவத்துக்கு ஆளானார் ஜெயலலிதா, இதன் பின் தலைவா படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது பின் நடிகர் விஜய் கை கட்டி தனது திரைப்படம் வெளியாக உதவி செய்யவேண்டும் என முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க அவரும் மனம் இறங்கி படம் திரையில் வெளியிட அனுமதித்தார். இந்த அணைத்து விவகாரம் பின்னனியில் விஜய் தந்தை SA சந்திரசேகர் இருந்து வருவதாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருக இருப்பதால் திமுகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படும் என்பதால், திமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யை அரசியல் கட்சி தொடங்க வைத்து திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வைப்பதன் மூலம் நடிகர் ரஜினிகாந்தை ஓரளவு சமாளிக்கலாம் என்று, அதற்கான முயற்சிகளை விஜய் தந்தை SA சந்திரசேகர் மூலம் திமுக தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதற்காக பெரும் தொகை சந்திரசேகரிடம் பேரம் பேசப்பட்டுள்ளதகவும் கூறபடுகிறது, இதுகுறித்து SAC தனது மகன் விஜய் உடன் பேச, ஆனால் அதற்கு விஜய் உடன்பட வில்லை, இதனை தொடர்ந்து திமுகவின் அழுத்தம் காரணமாக விஜய் ஒப்புதல் இல்லாமலே ச சந்திரசேகர் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக கூறபடுகிறது, ஆனால் அந்த புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அன்றே விஜய் வெளியிட்ட அறிக்கையில் காணாமல் போனதால், திமுக பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறபடுகிறது.