மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க கைகொடுக்கும் டெல்டா.! அதிர்ச்சி ரிப்போர்ட் கேட்டு அமைச்சர் பட்டியல் தயாரிக்கும் பணியை கைவிட்ட ஸ்டாலின்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமான அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட் நம்பி, அடுத்த அமைய இருக்கும் திமுக ஆட்சியின் மந்திரி சபை அமைக்கும் பணியில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.

அதே போன்று மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி அமைச்சர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு நேரில் அழைத்து பேசியுள்ளார். இந்நிலையில் இரண்டு தரப்புகளும் அடுத்தது தங்களுடைய ஆட்சி தான் என நபிக்கையுடன் இருந்து வரும் நிலையில், முக ஸ்டாலின் -எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் ஒரே நேரத்தில் சமீபத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து உளவு துறை ரிப்போர்ட்சென்றுள்ளது.

அதில் சென்னையில் உள்ள பெரும்பாலான சட்டசபை தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும், கொங்கு மண்டலில் வழக்கம் போல் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றும், வடமாவட்டத்தில், பாமக கூட்டணி மற்றும் வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக கூட்டணி வெற்றிக்கு வழிவகுத்துள்ளது, தென் மாவட்டத்தில் அதிமுக வாக்குகளை அமமுக பிரிப்பதால் திமுக மற்றும் அதிமுக சம நிலையில் இருந்து வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதே போன்று கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்படி தமிழகம் முழவதும் திமுக- அதிமுக இரண்டும் சம நிலையில் இருந்து வரும் நிலையில், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் டெல்டா மாவட்டம் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக இருந்த டெல்டா மாவட்டம்,கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து, போன்ற அதிமுக அரசின் அதிரடியால் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு பதிவுக்கு இரு தினங்களுக்கு முன் வைட்டமின் ப, அதிகமாக வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் விநியோகம் செய்துள்ளது, கடைசி நேரத்தில் திமுக வாக்காளர்களை கூட அதிமுகவுக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு தள்ளியுள்ளது, இதனை தொடர்ந்து டெல்டா பகுதியில் பாதிக்கு பாதி, தொகுதியை அதிமுக கைப்பற்றினால் கூட மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் கடும் இழுபறியில் இருக்கும் தொகுதிகளில் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக இருந்த தொகுதிகள் என்றும், எடப்பாடி – முக ஸ்டாலின் இருவருக்கும் தகவல் சென்றுள்ளது, இதனை தொடர்ந்து அடுத்தது திமுக ஆட்சி தான் என நம்பிக்கையில் மந்திரிசபை அமைக்கும் பணியில் இருந்த முக ஸ்டாலின் அந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.