திமுக ஆட்சியில் செய்த அட்டுழியம்… தூசி தட்டும் தவெக அரசு… வசமாக சிக்கிய யூ டியூபர் இர்பான்…

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பணம் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு, பின்பு அது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பல யுக்திகளை தவெக அரசு கையாண்டது. அதில் ஒன்று தான் பிரபல யூ டியூபர் மூலமாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலை, இதில் திமுகவுக்கு நெருக்கமாக இருந்த சில யூ டியூபர் வங்கி கணக்குகளுக்கு கருப்பு பணம் சென்று இருக்கிறது, அவர்கள் தங்கள் கமிஷனை எடுத்து கொண்டு,

திமுகவினர் யாருடைய வங்கி கணக்கில் பணம் ட்ரான்ஸார் செய்ய சொல்கிறார்களோ அப்படி செய்து இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது, இது தொடர்பான விவகாரங்களை தற்பொழுது தோண்டி எடுத்து தூசி தட்ட தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரபல யூ ட்யூபராக வலம் வரும் இர்பான் திமுகவுக்கு மிக நெருக்கமானவர், அதனால் அவருடைய வங்கி கணக்குகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய வேண்டும் என்றும்,

மேலும் அவருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்ய வேண்டும் என பலரும் தவெக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் இர்பான், அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் இர்பான் செய்த அட்டூழியத்துக்கு அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் எப்படி தப்பித்தார் என்பதே பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.யூடியூபர் இர்ஃ​பான் திமுக ஆட்சி காலத்தில், தனது கர்ப்​பிணி மனைவிக்கு மருத்​து​வப் பரிசோதனை செய்​து, கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை அறிந்து கொண்​டார்.அதனை, தனது யூடியூப் சேனலில் வீடியோ​வாக வெளி​யிட்டு அறி​வித்​தார். அப்​போது பல்​வேறு விமர்​சனங்​கள் எழுந்​த​தால், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநரகம், இர்ஃ​பானிடம் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பியது.

இதுதொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் அவரிடம் விசா​ரணை​ நடத்​தினர்.இதையடுத்​து, தனது செயலுக்கு வருத்​தம் தெரி​வித்து இர்ஃ​பான் மன்​னிப்பு கடிதம் வழங்​கி​னார். இதனை ஏற்று கொண்ட அப்​போதைய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இர்ஃ​பான் மீது நடவடிக்கை தேவை​யில்லை என தெரி​வித்​தார்.

இந்த பஞ்சாயத்து ஓய்ந்த அடுத்த சில வாரங்களில், மற்றொரு சர்ச்சை செயலில் இர்பான் ஈடுபட்டார், அதாவது இர்பான் யூடியூப் சேனலில் புதிய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பானததை தொகுத்து வழங்கி இருந்தார். அதில் இர்பான் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சியையும், அப்போது குழந்தையை தனது கையில் வாங்கி, தொப்புள் கொடியை வெட்டுவது காட்சி படுத்தப்பட்டது.

மருத்துவர் செய்ய வேண்டிய வேலையை சட்டத்துக்கு புறம்பாக செய்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதே மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது ஆனால் திமுக அரசு இர்பான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் தற்பொழுது கடந்த திமுக ஆட்சியில் செய்த தவறுக்கு தற்பொழுது தவெக அரசு சட்டப்படி இர்பான் போன்ற நபர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மறுபக்கம் கடந்த திமுக ஆட்சியில் ஊழல் பணம் யூ டியூபர் வாயிலாக பரிவர்த்தனை நடைபெற்றதை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here