துரைமுருகனை தூக்க திட்டம்… வீரமணியை தூண்டிவிடும் ஸ்டாலின்… சாதுர்யமாக காய் நகர்த்தும் கனிமொழி…

0
Follow on Google News

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல திருமண நிகழ்வில் சமஸ்கிரதம் மந்திரம் சொல்லி நடந்த திருமணத்திற்கு திராவிட கழக தலைவர் வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் பின்னணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக முதல் குடும்பம் இருக்க வாய்ப்புள்ளது. கி வீரமணியை பின்னின்று இயங்குவதே திமுக முதல் குடும்பம் தான் என்றும் , இதற்கு இடையில் இந்த விவகாரத்தில் சாதுர்யமாக தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்த தொடங்கி இருக்கிறார் கனிமொழி.

திமுக தலைவர் முக ஸ்டாலின் குடும்பத்திற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இடையில் நீண்ட காலமாகவே ஒரு வித உரசல் இருந்து கொண்டே தான் உள்ளது. இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன், முக ஸ்டாலின் குடுமப்த்தினர் தனக்கு எதிரான அரசியல் நகர்வுகளை மிக சம்மதியமாக கையாண்டு , ஒவ்வொரு முறையும் முறியடித்து, தன்னுடைய பொதுச் செயலாளர் பதவியை தக்க வைத்து கொண்டு வருகிறார்.

குறிப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, முதியவர்களுக்கு கட்சியில் ஓய்வு கொடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் கட்சியில் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட போதே துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார், மேலும் வேறு எந்த மாவட்டத்தில் என்னமோ செய்து கொள்ளுங்கள், வேலூர் மாவட்டதை பொறுத்த வரை என்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பதை திமுக முதல் குடுமபத்துக்கு தெளிவு படுத்தி இருந்து இருக்கிறார் துரைமுருகன்.

மேலும் திமுக மூத்த தலைவர்கள், பொன்முடி, கே என் நேரு, ஐ பெரியசாமி போன்றோர்களை எல்லாம் எளிதாக கையாண்டு வரும் முக ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் துரைமுருகன் என கூறப்படுகிறது. குறிப்பாக திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி வயது மூப்பு காரணமாக , திமுகவில் எந்த பதவியும் வழக்கப்படாமல் நீண்ட காலமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே போன்று வயதை காரணம் காட்டி துரைமுருகனை ஓரம் கட்ட முக ஸ்டாலின் என்ன வியூகம் வகுத்தாலும் கூட, அது துரைமுருகனிடன் எடுபடவில்லை, மேலும் கடந்த திமுக ஆட்சியில் மற்ற அமைச்சர்களை எல்லாம் முதல் குடும்பம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கூட, துரைமுருகன் தனித்து செய்யப்பட்டு இருந்திருக்கிறார், இந்நிலையில் தற்பொழுது கட்சியை மறுசீரமைக்க முடிவுக்கு வந்திருக்கும் முதல் குடும்பம்.

இதில் முதலில் திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் கைவசம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை பறித்து , அவரை வீட்டில் அமர வைக்க வேண்டும் என பல வகையில் முயன்று வருகிறது முதல் குடும்பம், அதில் ஒன்று தான் துரைமுருகன் இல்ல திருமணத்தில் பிராமணர்கள் வைத்து மந்திரம் ஓதியது திமுக கொள்ளகைக்கு எதிரானது என சு ப வீரபாண்டியன், கி வீரமணி ஆகியரை துரைமுருகனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது பின்னணியில் முதல் குடும்பம் உள்ளது என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து துரைமுருகனை திமுக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உள்ளே கழக குரல் ஒலித்து வரும் நிலையில், இதற்கு இடையில் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறார் கனிமொழி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன், பழுத்த அரசியல்வாதி, முக ஸ்டாலின் டவுசர் போட்ட காலத்தில் இருந்து கருணாநிதி உடன் அரசியலில் பயணித்தவர், இது போன்ற சர்ச்சை கருனாநிதி காலத்திலே துறைமுருகனுக்கு எதிராக வந்தது, அப்போதே சமாளித்த தன்னுடைய இடத்தை தக்க வைத்தவர் துரைமுருகன், அப்படி இருக்கையில் துரைமுருகனாக தன்னுடைய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றால் மட்டுமே தவிர, முக ஸ்டாலினால் அவரின் பதவியை பறிக்க முடியாது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here