மாரிதாஸை கைது செய்து சுந்தரவல்லியை சிக்க வைத்த திமுக..! ஆளுநரை சந்திக்கிறது பாஜக தலைமை…

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறவர், தொடர்ந்து திமுக அரசை விமர்சனம் செய்தும், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வீடியோ பதிவு செய்து வருகின்றவர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மறுநாள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து மாணவர் மணிகண்டன் இறப்பு விவகாரம் குறித்து எழுத்தாளர் மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் தனது டிவீட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று மாரிதாஸை கைது செய்தனர். இந்த கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பாஜக தலைவர்கள் திமுக அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மாரிதாஸ் திமுக அரசை விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில். இதற்கு முன்பு திமுக ஆதரவாளர் சுந்தரவல்லி பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில் சுந்தரவள்ளி பேசியதாவது, “இந்திய ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள், ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து தன்னை சிறப்படுத்திக் கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி,

மேலும் “சர்ஜிகல் strile” பண்ணினோம் என்று இந்தியாவின் ராணுவமும் பிரதமரும் சொன்னார்கள் ஆனால் ஒரே வாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ள பகுதியில் பதான் கோர்ட்டில் நாலு பயங்கரவாதிகள் உள்ளே பூந்து அடித்தார்கள் என்னய்யா பெரிய பெரிய சர்ஜிகல் strike பண்ணினேன்னு சொல்றீங்க இந்தியாவும் இந்திய ராணுவமும் ஆனால் நான்கு பேர் உள்ள பூந்து அடிச்சுட்டாங்க.

ஏதாவது பிரச்சனை இந்திய பிரதமர் மோடிக்கு வருதுன்னா உடனே ராணுவ வீரர்களை கொல்லனும் . 2500 ராணுவ வீரர்களை ஆடு மாடுகளை போல் வண்டியிலே ஏற்றி வரிசையாக போனார்கள், மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை மானத்தோடு அனுப்பினார் என்று எதிரி நட்டு பிரதமரை புகழ்ந்து பேசியும், இந்திய பிரதமர் மோடி ராணுவவீரர்கள் 40 பேரை கொன்று விட்டார் , கொரானா பிரச்சனையில் இந்தியா எதிர்கொள்ள தயாராக இல்லை, இந்தியா தோற்று போய் விட்டது எனறும் கூறிய சுந்தரவல்லி.

மேலும் “அபிநந்தனுக்கு கோட்டு சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்து கௌரவமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், எங்களுக்கு அண்டை நாடுகளோடு சண்டை வேண்டாம் என்று இம்ரான்கான் பேசியுள்ளார், இதனால் யாரை பேசியிருக்க வேண்டும் 40 பேரை பாதுகாக்க முடியாத மோடியையா அல்லது கோட்டு சட்டை வாங்கி கொடுத்த இம்ரான்கானையா என்று கசுந்தரவள்ளி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

மேலும் இது போன்று சுந்தரவல்லி, திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா மற்றும் பியூஸ் மனுஷ் ஆகியோர் பிரதமர் மற்றும் தேசத்துக்கு எதிராக பேசிய பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில். இது தொடர்பாக தமிழக ஆளுநர் அல்லது மத்திய உள்த்துறை அமைச்சகத்தை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க தமிழக பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மாரிதாஸ் கைது… போலீசார் – மதுரை பாஜகவினர் இடையே நடந்த கடைசி நிமிட பரபரப்பு சம்பவம் …