அமித்ஷா தமிழகம் வருகை.! திராவிட கட்சிகளை கலங்கடிக்க வழியெங்கும் பட்டைய கிளப்பும் RK சுரேஷ்.!

0
Follow on Google News

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதை யொட்டி, தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது அமித்ஷா தமிழகம் வருவதை யொட்டி அவர் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் யார் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் என்கிற பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் அமித்ஷா விமானம் சென்னை வந்து இறங்குவதற்கு முன்பே, சற்று முன் திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் CT.ரவி முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார், இதனை தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சிறப்பான ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழக பாஜக OBC அணியின் துணை தலைவரும், நடிகருமான RK சுரேஷ் அமித்ஷா செல்லும் வழியெங்கும் அவரை வரவேற்கும் வகையில், பிரமாண்ட பிளக்ஸ் போர்ட், சுவர் விளம்பரம், போஸ்டர் என திராவிட கட்சிகள் வியர்ந்து பார்க்கும் வகையில் மாநாடு போன்று பட்டைய கிளப்பி உள்ளார், அதில் இடப்பெற்றுள்ள கலியுக சாணக்கியர் வருக.! எதிர்பார்க்கிறோம் அரசனை .!விதைக்கிறோம் உறுதியை!! போன்ற வாசகங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.