தரமான சம்பவம் செய்ய காத்திருந்த முக அழகிரி.!மதுரை பயணத்தை ரத்து செய்த ஸ்டாலின்.! எத்தனை நாளைக்கு ஓடி ஒளிய முடியும்.?

0
Follow on Google News

திமுக சார்பில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் அதன் கட்சி தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த சாதனைகள் மற்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்படும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் அதிமுக அரசுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதாக அதிமுக சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது, மேலும் ஸ்டாலின் பங்குபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வருகின்றது.

கோவையில் நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் பதில் கூற முடியாமல் திணறிய சம்பவம், மேலும் அங்கே இருந்த திமுகவினரால் கடுமையாக அந்த தலித் சமூகத்தை சேர்ந்த பெண் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது, இந்நிலையில் ஜனவரி 3 மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முக அழகிரி. உன்னால் முதல்வராக வரமுடியாது, எனது ஆதரவாளர்கள் உன்னை வர விடமாட்டார்கள் என ஸ்டாலினை எச்சரித்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் மதுரையில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்குபெறுவதாக இருந்த நிலையில், திமுகவில் தற்போது வரை ஸ்லீப்பர் செல்களாக தொடர்ந்து வரும் முக அழகிரி ஆதரவாளர்களின் உதவியுடன் கிராமசபை கூட்டத்தில் 50 சதவிதத்திற்கு மேல் முக அழகிரியின் ஆதரவாள பெண்கள் மற்றும் ஆண்களை ஊடுருவ ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

மேலும் கூட்டத்தில் ஸ்டாலினிடம், எதற்காக அஞ்சா நெஞ்சர் எங்கள் அண்ணன் முக அழகிரியை கட்சியில் இருந்து ஓரம் காட்டினீர்கள் என்று ஒருவரை கேள்வி எழுப்ப வைத்து, அதற்க்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை என்றால் பதில் சொல்லுங்க, பதில் சொல்லுங்க, என கூட்டத்தில் பங்குபெற்ற 50 சதவிகித முக அழகிரி ஆதரவாளர்கள் கோஷமிட திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் கேள்வி எழுப்பிய முக அழகிரி ஆதரவாளர்கள் மீது ஸ்டாலின் தரப்பினர் தாக்க முறைப்பட்டால் ஸ்டாலின் முன்னிலையில் அவர்களை திரும்ப முக அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின் அனைத்தையும் கட்சித்தகமாக முடித்துவிட்டு ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கலைஞரின் உடன்பிறப்புகளை குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்திய ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என சாலைமறியல் நடத்திவிட்டு கலைந்து செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் முக அழகிரியின் ஆதரவாளர்கள் செய்து வந்த நிலையில், இந்த தகவல் ஸ்டாலினுக்கு செல்ல அதிரடியாக மதுரையில் நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் எத்தனை நாளைக்கு ஓடி ஒளிய முடியும் மதுரைக்கு வந்து தானே ஆகணும் அன்று இருக்கு தரமான சம்பவம் என காத்திருக்கின்றனர் முக அழகிரி ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும்.