முக ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் குஷ்பு..! பாஜக அதிரடி வியூகம்..

0
Follow on Google News

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் அதே தொகுதியில் அவரை எதிர்த்து நடிகை குஷ்புவை போட்டியிட வைக்க பாஜக தலைமை அதிரடி வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 1984 முதல் தற்போது வரை நடத்த சட்டமன்ற தேர்தலில் 8 முறை போட்டியிட்ட முக ஸ்டாலின் இரண்டு முறை தோல்வியும், ஆறு முறை வெற்றியும் பெற்றுள்ளார், இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து 6 முறையும், கொளத்தூர் தொகுதியில் இரண்டு முறையும் போட்டியிட்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முதலில் போட்டியிட்ட முக ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலே தோல்வியை தழுவினார், அதன் பின் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார், ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை தோல்வியும் நான்கு முறை வெற்றியும் பெற்ற முக ஸ்டாலின்.

அவர் வெற்றி பெற்ற சட்டமன்ற தேர்தலில் 1996 தவிர மற்ற தேர்தலில் கடுமையாக போராடி குறுகிய வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட முக ஸ்டாலின் இறுதியில் மிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அதன் பின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்து கொளத்தூர் தொகுதிக்கு சென்றார்,

2011 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள முக ஸ்டாலின் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது, இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான உத்தரப்பிரதேஷத்தில் உள்ள அமேதியில் பாஜக சார்பில் ஸ்மிர்தி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் ஸ்மிரிதி இரானி போட்டியிடுவதால் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவதை தவிர்த்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.

அதே பணியில் ஸ்ம்ரிதி ராணியை எவ்வாறு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக களம் இறக்கியதோ, அதே போன்று முக ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவில் புதியதாக இணைந்துள்ள நடிகை குஷ்புவை களத்தில் இறக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உதயநிதி தலையிட்டு காரணமாக கொளத்தூர் தொகுதியில் உள்ள திமுக மூத்த தலைவர் அதிருப்தியில் இருப்பதால், மேலும் கடந்த பத்து வருடங்களில் புதியதாக இளம் வாக்காளர்கள் யாரும் திமுகவில் இணையவில்லை, நடிகை குஷ்பு ஏற்கனவே திமுகவில் இனைந்து பணியாற்றியுள்ளதால், முக ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வைக்க அதிரடி வியூகங்களை பாஜக வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.