பெண்களுக்கு அது இல்லை… ஆண்களுக்கு இது இல்லை..நடிகை கஸ்தூரி எதை சொல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித்தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது தமிழ்நாட்டில் பூணூல் அணிய தடை விதிக்கப்படும், சனாதன ஒழிப்பின் முதல் பணி அதுவே என விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளது, பூணூல் குறித்த விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

கஸ்தூரி பதிலளித்துள்ளதாவது, பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலி ஆடுகளாக்க வேண்டாம் என கஸ்தூரி தெரிவிக்க அதற்கு வன்னியரசு, பூணூல் என்று சொன்னவுடனே எதற்காக இந்த பதற்றம்?

பூணூல் என்பது இந்து மத அடையாளமா? அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டுமான அடையாளமா?ஹிஜாப் மத அடையாளம் என்றால், பூணூல் என்ன அடையாளம்? என வன்னியரசு கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, பதற்றம் உமக்கு தான் நண்பரே. ரெட்டி பெயரை சொன்னதற்கே உமக்கு பெரும் சங்கடமாகி விட்டது. உங்களுக்கும் கட்சிக்கும் இரந்துதவி பெற்ற இந்துக்களையும் ஆன்மீகவாதிகளையும் பட்டியலிட்டால் ? (உங்கள் பாணியில் சொன்னால் ஆரிய வந்தேறி இந்து மதவாதிகள்)

பூணூல் அந்நிய மதங்கள் அடியெடுத்து வைக்குமுன் பண்டைய இந்திய வழக்கம். சங்கத்தமிழ்ச்சமூகத்திலும்
உண்டு. பூணூல் ஒரு மதத்துக்கோ ஒரு ஜாதிக்கோ மட்டும் சொந்தமில்லை.இதற்கு சிறந்த சான்று ராகுல் காந்தி. கேளுங்கள் அவரை – பூணூல் அணியும் அவர் எந்த மதம், மொழி, எந்த இனம், எந்த ஜாதி என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார் இதற்கு வன்னியரசு இந்தியச்சமூகமா? அப்படி ஒன்று இருக்கிறதா? பெண்களுக்கு மட்டும் பூணூல் மறுக்கப்படுவது ஏன்? (பார்ப்பன பெண்கள் உள்ளிட்டோரும்) என வன்னியரசு கேள்வி எழுப்ப.

இதற்கு நடிகை கஸ்தூரி, சரியாக படியுங்கள். இந்தியாவின் பல சமூகங்கள், தமிழர் உட்பட என்று குறிப்பிட்டுள்ளேன். இதற்கே அதிர்ச்சியானால், வள்ளுவன் அணிந்த பூணூலை பேசினால் உங்கள் நிலைமை? ஆண்களுக்கு பூப்பூக்கல்யாணம் இல்லை, பெண்களுக்கு பூணூல் இல்லை. இந்து பாரம்பரியத்தை மதிக்க இந்துவிரோதிகளுக்கு மனமில்லை. முதலில் இதை சொல்லுங்கள். சிறுத்தைகளின் தலைமையில் எத்தனை பெண்கள் உள்ளனர் ? எல்லா விஷயத்திலும் இரட்டை சொல், இரட்டை வேடம் என்றால் எப்படி நண்பா என நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார்.