காயத்ரியின் நோக்கம் இது தான்… அம்பலப்படுத்திய அண்ணாமலை… பாராட்டிய நடிகை கஸ்தூரி..!

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி மட்டுமே முழு நேரமும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றவர் பாஜகவில் இருந்து நீங்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம். தொடர்ந்து அண்ணாமலையை கடுமையாக காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து வந்தாலும், என்னை ஆயிரம் பேர் விமர்சனம் செய்வார்கள் அதற்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டிருந்தால், நாள் முழுவதும் பதில் தான் தரமுடியும், கட்சி பணியாற்ற முடியாது என காயத்ரி ரகுராம் விமர்சனங்களை ஒரு பொருட்டாக கருதாமல் கடந்து செல்கிறார் அண்ணாமலை.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு தலைவரை கடுமையாக விமர்சனம் செய்யும் போது, அந்த தலைவர் கண்டு கொள்ளவில்லை என்றாலும் கூட, அந்த தலைவரை தலைமை ஏற்றுள்ள கட்சியின் தொண்டர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு, எதோ ஒரு வகையில் தன் தலைவனை விமர்சனம் செய்த்தவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள், அப்படி உணர்ச்சிவசப்பட்டு எல்லை மீறி தவறான முறையில் அந்த தொண்டன் விமர்சனம் செய்யும் போது, அந்த தவறான விமர்சனத்தை சுட்டி காட்டி, அந்த கட்சியின் தலைவனை களங்கப்படுத்தும் வேலையை தான் காயத்ரி ரகுராம் செய்து வருகிறார் என்கின்றனர் பாஜக வட்டாரங்கள்.

அந்த வகையில் பாஜக நிர்வாகி ஒருவர் காயத்ரி ரகுராமை தவறான முறையில் விமர்சனம் செய்ய, அதை சுட்டி காட்டி, இதற்கும் காரணம் பாஜக தலைவர் அண்ணாமலை தான் என விமர்சனம் செய்து வந்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் கூட, ஒரு பெண்ணை தவறாக விமர்சனம் செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்பதால், உடனே காயத்ரியை தவறாக விமர்சனம் செய்த அந்த பாஜக நிர்வாகி அடிப்படை உறுப்பினரின் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் எதிர்வினையாற்றும் தங்களது சமூம் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வலைத்தளங்களில் உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்பது பொருள் அல்ல.

சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதை காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்.

விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி உங்கள் கவனத்தை சிதறடிப்பது தான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்; சில பத்திரிக்கைகள் என்னை பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பயந்தால், என்னுடைய கிராமத்தில், நான் ஒடுங்கி கிடக்க வேண்டியது தான். அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால், நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது. உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர், பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்! அதே சமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள அண்ணாமலை தன்னை பற்றி விமர்சனம் செய்து வருகின்றவர்களின் நோக்கம் என்ன என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் குறித்து தவறாக விமர்சனம் செய்த நபரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி, மேலும் இதற்கு முன்பு ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட கஸ்தூரி தலை குனியலாம் ஆனால் மலை குனியலாமா? கரடியோடு கூட சண்டை போட்டு விடலாம். ஆனால், ”கத்துக்குட்டிகளுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சண்டை செய்யலாமா? என மறைமுகமாக அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து வருவதற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்தது குறிப்பிடதக்கது.