சரத்குமாரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு… உடனே தன்னுடைய புலி படையை களத்தில் இறக்கி தரமான சம்பவம் செய்த திருமாறன் ஜி…

0
Follow on Google News

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக, ராதிகா சரத்குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் சினிமா பிரபலம், கணவர் சரத்குமார் இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என அரசியலில் நன்கு அனுபவம் வாய்ந்த நபராக இருந்தவர்கள்இருவரும். குறிப்பாக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் மிக பெரிய செலிபிரிட்டி என்பதால், சொகுசாக வாகனத்தில் இருந்த படியே டாட்டா காண்பித்து விட்டு சென்று விடுவார்களா.? அல்லது களத்தில் இறங்கி வேலை செய்வார்களா.? என்கிற கேள்விகளை சுக்குநூறாக உடைத்து துவம்சம் செய்யும் வகையில், குறிப்பாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரின் கள அரசியல்.

முதல் நாளே 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்த ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும், கட்சி நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, அனைவரிடமும் நடந்து கொண்ட அவர்களின் அணுகுமுறை , அனைவரையும் தேர்தல் கள அரசியலில் வேலை செய்ய உற்சாக படுத்தும் வகையில் அமைந்து இருந்தது. மேலும் விருதுநகர் தொகுதியில் உள்ள முக்கிய தலைவரை நேரில் சந்தித்தும் ஆதரவை பெற்று வரும் சரத் குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும்.

விருதுநகர் தொகுதியில் கணிசமாக இருக்க கூடிய நாடார் சமூகத்தை சேர்ந்த சங்கத்தின் நிர்வாகிகளை அவர்களின் இல்லத்திற்கே சென்று ஆதரவு திரட்டி வரும் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் அல்லம்பட்டி கரிக்கோல் ராஜை அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர் . நாடார் மகாஜன சங்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது என்பதால், விருதுநகர் தொகுதியில் உள்ள நாடார் வாக்குகள் பாஜக வேட்பளராக களம் இறங்கியுள்ள ராதிகா சரத்குமாருக்கு முழுமையாக கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் நேரடியாக 21 தொகுதிகளில் போட்டோயிடும் நிலையில், 21 வேட்பாளர்களில் ஒருவர் கூட நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்கிற கடும் அதிருப்தி அந்த சமூகத்தை சேர்ந்த நாடார் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளது பாஜகவுக்கு கூடுதல் பலமாக பார்க்க படுகிறது.

இந்நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பெருபான்மையாக முதன்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூகத்தின் முக்கிய தலைவராக இருக்க கூடிய சுமார் 25 லட்சம் உறுப்பினர்களை கொண்ட தென் இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் சரத்குமார். உடனே தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ள திருமாறன் ஜி.

விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்காளன்று, தன்னுடைய புலிப்படையான கட்சி நிர்வாகிகளை களத்தில் இறக்கி தன்னுடைய ஆதரவை தெரிவித்து தொடர்ந்து பிரச்சாரத்திலும் ஈடுபட வைத்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் பணியை தொடங்கி இரண்டே நாட்களில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் அணைத்து தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அவர்களின் அரசியல் அனுபவம் வாய்ந்த அணுகுமுறை தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சினிமாவில் மிக பெரிய செலிப்ரிட்டி, அரசியலில் நன்கு அனுபம் வாய்ந்தவர்கள் என சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இருந்தாலும், கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பண்போடு மரியாதையாக நடந்து கொள்கிறார்கள் என்பது பலர்க்கு பாடமாக அமைத்துள்ளது. குறிப்பாக முதல் முறையாக தேர்தல் தேர்தல் களம் காணுகின்றவர், மேலும் வணக்கம் வைத்தால் கூட பதிலுக்கு வணக்கம் வைக்காமல் கடந்து செல்கின்ற அரசியவாதிகள் மத்தியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் அரசியலில் பண்பு, மரியாதையை என்றால் என்ன என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்வது அவர்களின் வெற்றிக்கு கூடுதல் பலமாக பார்க்க படுகிறது.