வேண்டுமென்றே அவமானாம்படுத்த பட்ட ரோகித் ஷர்மா… ஆணவத்தில் ஆடும் ஹர்திக் பாண்டியா…

0
Follow on Google News

2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்துவருகிறது. காரணம், மும்பை அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ரோகித் சர்மாவிடம் சொல்லிவிட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மும்பை அணி தரப்பில் சொல்லப்பட்டாலும், ரோகித் சர்மாவின் தரப்பிலிருந்து அது மறுக்கப்பட்டது. ஒரு சாம்பியன் வீரரின் கேப்டன்சி பதவியை இப்படியான முறையில் பறிக்க கூடாது என்று அதிருப்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை UNFOLLOW செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மீது ரோகித் சர்மா ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன்சி பதவி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா “என்னை மீறி நடக்கும் செயல்களுக்கு நான் பொறுப்பில்லை” என்று கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார். முடிவில் ரோகித் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடமாட்டார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அணிக்காக மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்றார்.

குஜராத் அணியின் கேப்டன்சி பதவியை உதறிவிட்டு வந்த ஹர்திக் பாண்டியாவின் மும்பை அணி, கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா 43 ரன்களும், நமன் தீர் 20 ரன்களும், பெர்வீஸ் 46 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியதால் கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்தது. கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் 2 பந்தில் 10 ரன்கள் விட்டுகொடுத்தாலும், அதே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

மும்பை கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் ஹர்திக் பாண்டியா, அதேநேரத்தில் குஜராத் கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவுசெய்துள்ளார் சுப்மன் கில். மேலும் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவை லாங்-ஆனில் பீல்டிங் நிப்பாட்டினார் ஹர்திக் பாண்டியா. இந்த நடவடிக்கை பலரை ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் ரோஹித் சர்மா எப்போதும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே பீல்டிங் நிற்கமாட்டார். விராட் கோலியின் கேப்டன்சியில் கூட ரோஹித் சர்மா லாங் ஆனில் நின்று யாரும் பார்த்தது இல்லை. இருப்பினும், கேப்டன் ஹர்திக்கின் முடிவுக்கு செவி சாய்த்து அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பீல்டிங் செய்தார் ரோஹித் சர்மா. இந்த சம்பவம் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவை லாங்-ஆனில் பீல்டிங் நிப்பாட்டினார் ஹர்திக் பாண்டியா. இந்த நடவடிக்கை பலரை ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் ரோஹித் சர்மா எப்போதும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே பீல்டிங் நிற்கமாட்டார். விராட் கோலியின் கேப்டன்சியில் கூட ரோஹித் சர்மா லாங் ஆனில் நின்று யாரும் பார்த்தது இல்லை. இருப்பினும், கேப்டன் ஹர்திக்கின் முடிவுக்கு செவி சாய்த்து அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பீல்டிங் செய்தார் ரோஹித் சர்மா. இந்த சம்பவம் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.