நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவில் இருந்து ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினமா செய்துவிட்ட காலியாக உள்ள தொகுதிகளுக்கு இன்னும் இடைத்தேர்தலை அறிவிக்காமல் காளம் தாழ்தி வருகிறது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் தவெக வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறது, மேலும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் தவெக ஆட்சி அமைத்து இருக்காது, தவெக அமைச்சர்கள் இன்று அமைச்சராக இருந்திருக்க முடியாது என பேசி இருக்கிறார்.

இப்படி கூட்டணி காட்சிகளின் குடைச்சல்களை சரி செய்ய, மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த தவெக அதற்கான வேலைகளில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, அதன் வெளிப்பாடு தான் அதிமுகவில் இருந்து இதுவரை 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது, ஆனால் அவர்கள்ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இனைந்தாலும் கூட, இடைதேர்தல் நடக்குமா.? நடக்காதா.? என்கிற இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் மூலம் புதிய யுக்தியை கையாண்டு உள்ளது தவெக , அதே போன்று எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகிய இருவருமே இனி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்து இடைதேர்தலை சந்திப்பது என்பதை கைவிட்டு விட்டு அதிமுகவை தவெக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வைப்பது என்கிற திட்டத்தை வகுத்துள்ளனர்.
அதிமுக கைவசம் இருக்கும் தற்போதைய 41 சட்டசபை உறுப்பினர்களில், 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் தவெக வில் இணைந்தால் கட்சி தாவல் சட்டம் பாயாது, மேலும் தங்கள் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை, அப்படியே தவெக வில் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்று கொள்ளலலாம், அந்த வகையில் அதிமுக வில் இருந்து 3ல் 2 பங்கு என 28 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் தவெக பக்கம் கொண்டு செல்வதற்கான வேலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்பொழுது அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், இனியும் அதிமுகவில் இருந்து அரசியல் வாழ்க்கையை இழக்க விருப்பம் இல்லாதவர்கள், எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் பின்னால் சென்று தவெக வில் இணைந்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வலம் வரும் எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
அந்த வகையில் விரைவில் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிமுகவை சேர்ந்த 28 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் வர இருக்கும் நிலையில், அடுத்து தனி மெஜாரிட்டி உடன் ஆட்சியை நடந்து இருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை டெல்லி பாஜக கழட்டி விட்டு விட்டது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, அந்த வகையில் டெல்லி பாஜகவும் எடப்பாடியை கழட்டிவிட்டு விட்ட நிலையில், தனி மரமாக நிற்கும் எடப்பாடியை நம்பினால் நாமளும் தனிமரமாகி விடுவோம் என்கிற அச்சம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வந்திருக்கிறது என்றும், இதனை தொடர்ந்து விரைவில் அதிமுகவின் உடக்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

