உதயநிதி தலைமைக்கு கனிமொழி எதிர்ப்பு… உக்கட்ட குடும்ப சண்டை… கனிமொழி பக்கம் சீனியர்கள்…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் திமுகவின் படுதோல்விக்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் சீனியர் தலைவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யாமல், குறிப்பாக சீனியர் தலைவர்களை ஓரம் கட்டும் வகையில் நடந்து கொண்டது தான் என்கிற சலசலப்பு திமுக உள்ளே நீடித்து வருகிறது, மேலும் திமுக சீனியர்கள் பெரும்பாலும் உதயநிதிக்கு எதிராகவே மாவட்டம் தோறும் இருந்து வரும் நிலையில்,

கனிமொழிக்கு – உதயநிதிக்கு இடையிலான பிரச்சனையில் பெரும்பாலான திமுக சீனியர் தலைவர்கள் தற்பொழுது கனிமொழிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்பொழுது சீனியர் தலைவர்களின் துணையுடன் திமுக தலைமையை கைப்பற்றும் நடவடிக்கைகளில் கனிமொழி சாதுர்யமாக காய்களை நகற்றி வரும் செய்தி திமுகவில் இதுவரை ஓரம்கட்டப்பட்டு வந்த கனிமொழி ஆதரவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற்ற திமுக செயல்குழு கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது, அதில் தமிழகம் முழுவதும் சுமார் இரண்டு தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் என்கிற விதத்தில் மொத்தம் 110 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும், ஒரு சில மாவட்டங்களில் 3 சட்டபை தொகுதிகள் இருக்கலாம் மேலும் இனி அணைத்து பொறுப்புகளும் தேர்தல் நடத்தியே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பொறுப்புக்கும் வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரே பதவியில் மூன்று முறை ஒருவர் இருக்க கூடாது என்கிற தீர்மானமும் நிறைவேற்ற பட்டுள்ளது, ஆனால் ஒரு நபர் மூன்று முறை ஒரு பதவியில் இருக்க கூடாது என்கிற தீர்மானம், இனிமேல் தொடங்கியா.? அல்லது இதுவரை ஒரே பதவியில் மூன்று முறை இருந்தவர்கள் மாற்றம் செய்ய போகிறார்களா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.

அந்த வகையில் இதுவரை ஒரே நபர் மூன்று முறை பதவியில் வகித்து வந்தவர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றால், அதற்கு திமுகவில் சீனியர் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது, மேலும் வயது வரம்புக்கு சீனியர் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம், திமுகவின் உட்கட்சி பூசலுக்கு வழி வகுத்து இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உடனே அமல் படுத்த வேண்டும் என்று முக ஸ்டாலினிடம் வலியுறுத்திய உதயநிதி, மேலும் மாவட்டம் தோறும் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார், அதாவது மாவட்டம் தோறும் உதயநிதி அவருக்கான ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, தேர்தலில் அவருடைய ஆதரவர்களுக்கு சாதகமாக அமைய திட்டமிட்டு இருக்கிறார்.

ஆனால் கனிமொழி தரப்பில் மாவட்டம் தோறும் பொறுப்பாளர் நியமனம் செய்தால், அந்த பொறுப்பாளர் ஒரு தரப்புக்கு சாதகமாக வேலை செய்வார்., அதனால் பொறுப்பாளர் இல்லாமல் தேர்தல் நடைபெற்று மாவட்ட தோறும் நிர்வாகிகளுக்கு பதவி வழக்கப்பட வேண்டும் என தற்பொழுது மாவட்ட தோறும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய தடையாக இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் செயல் தலைவராக உதயநிதியை நியமிக்க அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், தனக்கு பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும், அப்படியில்லை என்றால் உதயநிதியை செயல் தலைவராக நியமிக்க கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் தன்னுடைய நிலைப்பாட்டை கனிமொழி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here