G Square – சபரீசன் தொடர்பு… வெளியான Corporate Links … மாட்டிகிட்டாரு மாப்பிளை சார்…

0
Follow on Google News

₹5,000 கோடி சவால் விடுத்திருக்கும் ஜி ஸ்குயர் நிறுவனத்தின் இயக்குனர் ராமஜெயம் தொடர்பான விவகாரத்தில், தற்போது சில Corporate Links சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் என்ன? யார் எந்த நிறுவனத்தில் Director அல்லது Partner ஆக இருக்கிறார்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றோடொன்று எப்படி இணைகின்றன? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகள்.

முதலில் G Square Realtors நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். முக ஸ்டாலின் மருமகன் வேதமூர்த்தி சபரீசன் நெருங்கிய நபரான அண்ணாநகர் Mohan கார்த்திக் Max Space Realty LLP நிறுவனத்தில் Vedamurthy Sabarisan உடன் Designated Partner-ஆக இருப்பதாக corporate records-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்ததாக Touch Feel Technologies LLP.இந்த நிறுவனத்திலும் Mohan Karthik மற்றும் Sabarisan இருவரும் Partners-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதோடு தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நிறுவனம் Look Up Merchandise LLP. இதில் Mohan Karthik, Sabarisan மற்றும் Karthikeyan Shanmugasundaram ஆகியோர் Partners-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதாவது, இந்த நிறுவனங்களின் பெயர்களை மட்டும் தனித்தனியாகப் பார்க்காமல், அதில் இடம்பெறும் Directors மற்றும் Partners-ஐ வைத்து பார்க்கும்போது ஒரு corporate connection இருப்பதாக இந்த records சுட்டிக்காட்டுகின்றன.

இன்னொரு முக்கியமான Corporate லிங்க் இப்போது மற்றொரு நிறுவனத் தொடர்பை பார்ப்போம். Lotus Horizon Developers LLP நிறுவனத்தில் தற்பொழுது 5000 கோடி சவால் விடுத்துள்ள ஜி ஸ்குயர் இயக்குனர் Ramajayam மற்றும் Prashanth Reddy Tadisina ஆகியோர் Partners-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே Prashanth Reddy Tadisina, Lotus Bhevin Developers LLP நிறுவனத்தில் Vedamurthy Sabarisan உடன் Partners-ஆக இருப்பதாக records தெரிவிக்கின்றன.

அதன்பிறகு Lotus Bhevin Developers LLP-ல் இருக்கும் Sabarisan, Max Space Realty LLP நிறுவனத்தில் Mohan Karthik உடன் இணைந்திருக்கிறார். இதனால் ஒரு chain உருவாகிறது: அதாவது Ramajayam → Prashanth Reddy → Sabarisan → Mohan கார்த்திக் “இந்த நிறுவனங்களுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை” என்று கூறப்படும் நிலையில், public corporate records-ல் காணப்படும் இந்த common directorship மற்றும் partnership links குறித்து தெளிவான விளக்கம் என்ன? என்பதுதான் தற்போது எழும் கேள்வி.

மேலும், இதோடு இந்த corporate connections முடிந்துவிடவில்லை என்று கூறப்படுகிறது. Sreejith → Ramajayam → Sreekala → Geetha மோகன் என்ற மற்றொரு தொடர்பும் முன்வைக்கப்படுகிறது. இதில் இந்த நபர்கள் எந்தெந்த நிறுவனங்களில் இணைந்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தில் யார் Director? யார் Partner?

எந்த நிறுவனங்களில் common ownership அல்லது partnership links இருக்கின்றன? என்கிற குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்.

Corporate records-ல் ஒரே நிறுவனத்தில் இருப்பது அல்லது பல நிறுவனங்களில் business தொடர்பு வைத்திருப்பது மட்டும் தவறு என்று கூற முடியாது. ஆனால், ஒரு தரப்பில் “தொடர்பே இல்லை” என்று கூறப்பட்டால், அதற்கு மாறாக public records-ல் தெரியும் இந்த நிறுவனத் தொடர்புகளுக்கு என்ன விளக்கம் என்பது பொதுமக்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது.

அதனால், ₹5,000 கோடி சவால் விடுத்துள்ள ராமஜெயத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி: இந்த corporate links குறித்து நீங்கள் என்ன விளக்கம் சொல்கிறீர்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புடையவை? இந்த தொடர்புகள் வெறும் business partnerships மட்டும்தானா? அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா?

இதற்கான தெளிவான பதில் கிடைத்தால், இந்த விவகாரம் குறித்து பொதுமக்களுக்கும் முழுமையான புரிதல் கிடைக்கும். Documents public-ஆக இருக்கின்றன. Corporate records-ல் நிறுவனங்களின் Directors மற்றும் Partners பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த records-ன் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிப்பார்களா என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here