16 பெண்கள்… சவுக்கு சங்கரின் லீலைகள்… ஃபோட்டோ ஆதாரத்துடன் வெளியிட்ட சவுக்கு சங்கரின் அட்மின்..!

0
Follow on Google News

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக கோயம்புத்தூர் சைபர் கிரைமில் போடப்பட்ட வழக்கை தொடர்ந்து தேனி போலீசாரால் போடப்பட்ட கஞ்சா வழக்கு, திருச்சி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் தொடரப்பட்ட வழக்கு, மேலும், அரசு ஆவணங்களை அனுமதி இன்றி வெளியிட்டதற்கு ஒரு வழக்கு என இன்று குண்டாஸ் வரை போடப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர்.

இந்த வழக்குகளில் இருந்து விடுபட்டு சிறையில் இருந்து வெளிவர குறைந்தது ஓராண்டாவது ஆகும் என சட்ட வல்லுநர்கள் கூறும் நிலையில், அவர் மீது இன்னும் பல வழக்குகள் போடுவதற்கு தோதுவாக சவுக்கின் லீலைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார், சவுக்கு சங்கரின் முன்னாள் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு ட்விட்டர் அக்கவுண்டின் அட்மினுமான பிரதீப்!

ஏற்கனவே, மாலதி என்ற பெண் நெறியாளருக்கு 3 கோடி மதிப்பில் சவுக்கு சங்கர் வீடு வாங்கி கொடுத்ததாக இருந்த குற்றச்சாட்டில் மாலதியின் பெயரில் சொத்து பதியப்பட்ட ஆவணத்தை ஆதாரத்துடன் வெளியிட்டவரும் இதே பிரதீப் தான்! இப்போது ஒரு படி மேலே போய், சவுக்கு சங்கரின் பேஸ்புக் அக்கவுண்டில் அவர் பெண்களுடன் ஆபாசமாக பேசிய செக்ஸ் சாட்டுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்!

இது போலி என்று மறுப்பதற்கு இடமே இல்லை! ஏனென்றால் சவுக்கு சங்கரின் பேஸ்புக் அக்கவுண்டில் இன்றுவரை இவர் அட்மின் ஆகவே இருக்கிறார்! மேலும், 100 கோடிக்கு மேல் சவுக்கு சங்கருக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரமும் என்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார்! டிநகரில் யூடியூப் சேனல் ஆபீஸ், அதில் 15 பேருக்கு மேல் ஊழியர்கள், இனோவா கிரிஸ்டா ஹூண்டாய் வெனியூ என இரண்டு கார்கள்,

மாலதிக்கு மூன்று கோடிக்கு சொத்து என இவையெல்லாம் நேர்மையாக சம்பாதித்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் கட்சிகளிடம் காசு வாங்கிக் கொண்டுதான் சவுக்கு பேசி வருவதாகவும் ஒரே கோடாக போட்டுவிட்டார்! சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கை உடைக்கப்பட்டு சிறையில் இருக்கும் போது இருந்த மக்கள் ஆதரவு கூட, இப்போது சவுக்கின் ஆபாச வேலைகளை பார்த்து சரிய தொடங்கி விட்டது.

இது போதாது என்று சவுக்குடன் இணைந்து வேலை பார்த்த ஊழியர்கள் பலரும் சவுக்கு மீடியாவை விட்டு வெளியேறிவிட்டனர்! குறிப்பாக லியோ என்ற நெறியாளர் காவல்துறை விசாரணைக்கு பயந்து இன்னும் தலைமறைவாகவே உள்ளார்! ஏற்கனவே, மதன் ரவிச்சந்திரன் நடத்திய சீக்ரெட் ஆப்ரேஷனில் இந்த லியோ என்ற நபர் சவுக்கு அலுவலகத்திலேயே கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது!

இப்போது சவுக்கு மீது தேனீ போலீசாரால் கஞ்சா வழக்கும் பதியப்பட்டு இருப்பதால் அவருக்கு தொடர்புடைய பலரும் சற்று விலகியே நிற்கின்றனர்! நெறியாளர் லியோவும் பல வாரமாக ஆளையே காணோம்! மேலும், சவுக்கு மீடியா தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் அவருக்கான ஆதரவு குரல்களும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது! விரைவில் வருமான வரித்துறை, ED போன்ற அமைப்புகளும் இந்த வழக்குகளில் நுழையும் என்றும் கூறப்படுகிறது! சவுக்கு சங்கர் இதையெல்லாம் எப்படி சமாளிப்பார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!