தற்கொலைக்கு முயன்ற பெண்… காப்பாற்றிய குளவிகள்…! வெளியான சிசிடிவி காட்சிகள்..

0
Follow on Google News

கேரளா ; கேரளாவில் நேற்று மாலை நடந்த ஒரு சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விசாராயின் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் சுய அடையாளங்களை கேரள போலீசார் தரமறுத்துவிட்டனர்.

கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டமான ஆலப்புழாவில் உள்ள காயம்குளத்தில் திங்கட்கிழமை மாலை அங்கிருந்த பி.எஸ்.என்.எல் டவரில் ஏறிய பெண் ஒருவர் தனது குழந்தையை கணவர் திருப்பித்தரவில்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியே போர்க்களமானது.

அதைக்கண்ட மக்கள் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவலளித்தனர்.விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அந்த பெண் டவரில் ஏறி குதிப்பதிலேயே மும்முரமாக இருந்தார்.

அவரது விதியை முடிக்க விரும்பாத கடவுள் குளவி வடிவில் வந்தார். அந்த பெண் டவரில் ஏறும்போது அந்த டவரில் இருந்த குளவிக்கூட்டை தெரியாமல் மிதித்துவிட்டார். அதனால் ஆக்ரோஷமான குளவிகள் அந்த பெண்ணை சுற்றி மொய்க்க ஆரம்பித்தன. மேலும் அவைகள் அந்த பெண்ணை கடிக்கவும் ஆரம்பித்தன. இதில் பயந்துபோன அந்த பெண் வேகமாக கீழே இறங்கினார்.

10 முதல் 15 அடிகள் உயரத்தில் இருந்தபோது கீழே குதித்தார். கீழே தீயணைப்புத்துறையால் விரித்துவைத்திருந்த மீட்பு வலையில் விழுந்தார். அதையடுத்து அவர் காயம்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இருதினங்களுக்கு முன்னர் தனது குழந்தையுடன் திரூர் வந்த வர தனது கணவருடன் சண்டையிட்டுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக அந்தப்பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லவே தற்கொலை முடிவெடுத்து காயம்குளம் சென்றிருக்கிறார். காவல்துறை வட்டாரங்கள் குடும்பத்தகராறு காரணமாக இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார் என கூறுகின்றனர். மேலும் அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் குறித்த தகவலை வெளியிட மறுத்துவிட்டனர்.