ராஜபக்சே எங்கே இருக்கிறார்.. இந்திய வெளியுறவு துறை தகவல்..! தேடுதல் வேட்டையில் கிழச்சியாளர்கள்..

0
Follow on Google News

இலங்கை : இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தற்போது கலவரம் வெடித்துள்ளது. மஹிந்த ராஜபக்சே அவரது மகன் மற்றும் மனைவி உள்ளிட்ட அவரது உறவினர்கள் அனைவரும் தங்களது இல்லத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக சொல்லப்படும் ஞான அக்கா என்பவரின் ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனிடையே பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தையொட்டி பொதுமக்கள் கடந்தசிலநாட்களாக கூடாரமிட்டு போராட்டத்தில் வந்தனர். நெருக்கடிகள் அதிகரித்ததால் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ராஜபக்சே ஆதரவு தலைவர்களின் இல்லங்களை குறிவைத்து தாக்கினர். மேலும் அவர்களது வீட்டை தீக்கிரையாக்கினார்.

இந்த சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் வீடும் தப்பவில்லை. ஹம்பன்தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின் சொந்த வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. மேலும் மேடமுலானாவில் அமைந்துள்ள அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் இல்லங்களும் எரிக்கப்பட்டது. நிலைமை மோசமாகி வருவதால் மே 12 வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பி செல்லலாம் என கணித்த பொதுமக்கள் அனைத்து விமானநிலையங்களிலும் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் அவர் இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக தப்பிச்சென்றிருக்கலாம் என வதந்தி பரவிய நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ராஜபக்சே இந்தியாவுக்கு வரவில்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வந்த தகவலைன் படி ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழீழ தலைநகரான திரிகோணமலை ராணுவத்தலைமையகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மக்கள் ராணுவத்தலைமையகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

மேலும் பொதுச்சொத்தை சேதப்படுத்துவோர் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை சுட்டுத்தள்ள இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்டோரை போலீசார் சுட்டுத்தள்ளியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய அதிபர் கோத்தபாய ராஜபக்சே மக்களை வன்முறையை கைவிட்டு அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.