திருமண பெண் கூட்டு பாலியல் …. மிரட்டி விற்பனை செய்யப்பட்ட அவலம்..! களத்தில் இறங்கிய போலீசார்..

0
Follow on Google News

உத்திரபிரதேசம் : இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய அதிகாரி ஒருவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்தார். மேலும் பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தனது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற இளம்பெண்ணை மூன்று கொடிய மிருகங்கள் கற்பழித்ததுடன் அந்த அப்பாவி பெண்ணை வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் உத்திரப்பிரதேசத்தையே உலுக்கியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை காணலாம். உத்திரப்பிரதேசம் ஜான்சியை சேர்ந்தவர் அகிலா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று நடைபெற இருந்த தனது திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக அகிலா உறவினர் வீடுகளுக்கு சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரை கடத்தியுள்ளனர். பின்னர் அந்த அப்பாவி திருமணப்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை வெவ்வேறு இடங்களில் சிலநாட்கள் தங்கவைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிய அந்த அரக்கர்கள் ஜான்சியில் உள்ள ஒரு உள்ளூர் அரசியல் பிரமுகரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் மத்தியபிரதேசத்திலுள்ள தாடியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வேறு ஒருவருடன் தங்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அங்கு பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்ட அந்த அபலைப்பெண் அங்கிருந்து சரியான நேரத்தில் தனது தந்தையை தொடர்புகொண்டார். அபலைப்பெண்ணின் தந்தை உத்திரபிரதேச காவல்துறையின் உதவியை நாடினார். அதைத்தொடர்ந்து விரைவாக களத்தில் இறங்கிய காவல்துறை மத்தியபிரதேசம் பதரி கிராமத்திலிருந்து அந்த பெண்ணை மீட்டனர்.

தெஹ்ராலி மாவட்ட வட்ட அதிகாரி (CO) அனுஜ் சிங் கூறுகையில் “தன்னை கடத்தி பாலியல் பலாதிகாரத்துக்கு உட்படுத்தி பின்னர் வேறு ஒருவருக்கு விற்றதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் மாஜிஸ்திரேட் முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிரவிசாரணை நடைபெற்று வருகிறது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.