90 சதவீதம் பேர்களுக்கு எந்த அறிகுறியுமே தென்படுறதில்லை.! கொரோனா இரண்டாம் அலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை.!

0
Follow on Google News

இந்திய மருத்துவர்கள் கல்லூரியின் தலைவராகவும் இருந்த மிகவும் பிரபலமான, மும்பையைச் சேர்ந்த மருத்துவரான சஷாங்க் ஜோஷி கொரோனாவுக்கான சிகிச்சை, மேலும் இதனுடன் தொடர்புடைய ஆய்வு பற்றிய அடிப்படை அனுபவங்களை பிரதமரின் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார், இரண்டாவது அலை குறித்து மருத்துவரீதியாக என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி அவர் பேசியதாவது.

புதியதா வந்திருக்கக்கூடிய இந்த இரண்டாவது அலை, இது மிக விரைவாகப் பரப்புது. முதலாவதா வந்த அலை பரப்பியதை விட இந்த அலை நுண்கிருமிகளை அதிக விரைவாக பரப்புது. ஆனா ஒரு நல்ல விஷயம் என்னென்னா, இதிலிருந்து மீட்சி வீதம் அதிகம், இறப்பு வீதம் குறைவு. இந்த அலைகளுக்கு இடையே, 2-3 வித்தியாசங்கள் இருக்கு, முதலாவதா இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிலும் கொஞ்சம் காணப்படுது.

இதற்கான அறிகுறிகள், முன்ன மாதிரியே மூச்சிரைப்பு, வறட்டு இருமல், காய்ச்சல்னு எல்லாம் பழைய அலையில் வந்தது மாதிரியே இருந்தாலும், கூடவே முகர்வுத் திறனின்மை, சுவைத்திறனின்மையும் ஏற்படுது. மேலும், மக்கள் பீதியடையறாங்க. இதனால பீதியடைய வேண்டிய அவசியமே கிடையாது. 80-90 சதவீதம் பேர்களுக்கு இவற்றில எந்த அறிகுறியுமே தென்படுறதில்லை, mutationன்னு சொல்லப்படும் மாறுபாட்டால பயப்படத் தேவையில்லை.

இந்த மாறுபாடு நிகழ்ந்துக்கிட்டே தான் இருக்கும். எப்படி நாம நம்ம உடைகளை மாத்தறோமோ, இதை மாதிரியே இந்த நுண்கிருமியும் தன்னோட நிறத்தை மாத்திக்குது, ஆகையால கண்டிப்பாக இதனால பீதியடையவே தேவையில்லை, இந்த அலையையும் நாம் கடந்துருவோம். அலைகள் வரும் போகும் அப்படீங்கற மாதிரியே இந்த நுண்கிருமியும் வரும் போகும். ஆக, இவை தான் வேறுபட்ட அறிகுறிகள் அப்படீன்னாலும், நாம மருத்துவரீதியா எச்சரிக்கையோடு இருக்கணும். 14 முதல் 21 நாட்கள் வரையிலான இந்த கோவிடுடைய அட்டவணை இருக்கு, இது தொடர்பா மருத்துவர்களோட ஆலோசனைப்படி நடக்கணும்.