எப்ப பாரு ஒரே விளையாட்டு.. திமுக எம்பி செந்தில்குமாருக்கு எதிராக தொகுதி முழுவதும் கையெழுத்து இயக்கம்.!

0
Follow on Google News

தருமபுரி திமுக எம்பியாக இருந்து வருகின்றவர் டாக்டர் செந்தில்குமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அரசியல் உலகிற்கு தெரிய வந்தார், முழு நேரமும் சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவு செய்யும் எம்பி செந்தில்குமார், அவர் எம்பியாக பதவி ஏற்றத்தில் இருந்து நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவி பிரமாணம் செய்து கொண்ட பொது வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என கோஷமிட்டு பதவி ஏற்று கொண்ட செந்தில்குமார் எம்பி, அவருடைய டிவீட்டர் பக்கத்தில் அவர் தமிழில் பதிவு செய்யும் பதிவுகளில் அதிக பிழை இருந்ததை தொடர்ந்து தமிழ் வாழ்க என பதவி பிரமாணம் செய்து கொண்டு நீங்களே தமிழ் மொழியை கொலை செய்யலாமா.? என்றும் மேலும் உங்களிடம் இருந்து தான் தமிழை காப்பாற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வெச்சு செய்தனர்.

கடந்த வருடம் கொரோனா முதல் அலையில் மக்கள் அச்சத்தில் இருந்த போது, தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் கவனம் செலுத்தாமல் டிவீட்டர் பக்கத்தில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்களிடம் வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்தியது சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவர் தொகுதிக்குட்பட்ட மருத்துவமணையை ஆய்வு செய்வதாக மாஸ்க் அணியாமல் புகைப்படம் வெளியிட்டு, ஒரு மருத்துவர் நீங்களே மாஸ்க் அணியாமல் ஆய்வு செய்யலாமா.? என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.

இதே போன்று நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்ததும், பார்த்திபனை கிண்டல் செய்வது போன்று அண்ணனுக்கு பாஜகவில் ஒரு சீட் பார்சல் என நக்கல் செய்து, அதற்கு பார்த்திபன் பதிலடியில் தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்த்தரமாக கமெண்ட் போட்டதால் நெட்டிசன்கள் மீன் போட்டு மேம்பாட்டுப் பணியில் அசிங்கப் படுத்துகின்றார்கள் அவரை அதில் ஒன்று எம்பி அண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல் என்பதெல்லாம் அநாகரிகம் என அவர் பாணியில் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இப்படி ஒவ்வொருவரிடம் சண்டையிட்டு அசிங்கப்பட்டு வரும் செந்தில்குமார் எம்பி, தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலையின் போது அவரும் தொகுதி மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு வேலையையும் செய்யாமல், இந்த ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வரும் காவலதுறைக்கு இடையூறு செய்வது போன்று சமூக ஊடகத்தில் யாருடனாவது வம்பிழுத்து அவர்கள் பதிலளித்தால் உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவல்துறைக்கு டிவீட்டர் மூலம் புகார் தெரிவித்து வருகிறார்.

நாடு இருக்கும் இந்த நிலைமையில் போலீசாருக்கு வேறு வேலை இல்லையா என பலர் கண்டித்து வரும் நிலையில், பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார், இந்த ஜோக்கரை யாரும் கண்டுகொள்ளாதீர்கள், இவர் ஒரு சமூக வலைதளத்திற்கு அடிமையான ஒரு நபர் என தருமபுரி எம்பி செந்தில்குமாரை ஜோக்கர் என குறிப்பிட்டிருந்தது பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தி நெட்டிசன்கள் ஜோக்கர் செந்தில் என கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் எதிராக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தருமபுரி தொகுதி முழுவதும் பொது மக்களிடம் கைய்யப்பம் பெற, கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்க அப்பகுதி இளைஞர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.தொகுதி முழுவதும் இவருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கி, அதை திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.