பிளஸ் ஒன் படிக்கும் 16 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பம்… தாய் அதிர்ச்சி…

0
Follow on Google News

விருதுநகர் மாவட்டத்தில் சேர்ந்த 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைத்த போலீஸார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் செம்பட்டியை சேர்ந்த 16வயதுடைய சிறுமி ஒருவர் அந்த பகுதியை உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த 17வயதுடைய சிறுவன் அவர் படிக்கும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர்கள்‌ இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் சிறுவன் அந்த சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளான். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூற, இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் விருதுநகர் எஸ்.பி ஆபிசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு உத்தரவிட, விசாரணணையை விரைவாக தொடங்கினார்.

இந்த விசாரணையில் சிறுமி ஐந்து மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், மைனர் என்பதால் மதுரை மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுவனால் பிளஸ் 1படிக்கும் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் விருதுநகர் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

error: Content is protected !!