உண்மையை மறைத்து நடிகர் சூர்யா வன்னியர், தேவர், கவுண்டர் இன மக்களை வம்புக்கு இழுப்பது ஏன்..?? பிரபல நடிகர் பரபரப்பு குற்றசாட்டு..

0
Follow on Google News

தொடர்ந்து உண்மையை மறைத்து பொய்யை நடிகர் சூர்யா பரப்பி வருவதாக ருத்ரதாண்டவம் படத்தின் நடிகர் ஜெயம் SK கோபி சில ஆதாரங்களுடன் பரபரப்பு குற்றசாட்டுகளை வெளியிட்டுள்ளார்.நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2க்கு பின்பு சுமார் அவர் நடிப்பில் வெளியான ஒன்பது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்துள்ளது. இதற்கு காரணம் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படமும் மற்றும் அவரும் தேவையின்றி சர்ச்சையில் சிக்குவது தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ருதரத்தாண்டம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் SK கோபி தெரிவித்துள்ளதாவது, சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் வரும் அதாவது ஏர் ஒட்றவனும் ஏரோ ப்ளைன் ல போகனும் அதான் என் ஆசை னு ஒரு வசனத்தை சூர்யா பேசுவார்.

அதாவது இந்த மாதிரி உண்மையாகவே ஆசைப்பட்டவரின் உண்மை பெயர் கோபிநாத். இவர் பிராமண சமூகத்தை சார்ந்தவர். இவர்தான் ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று பெருமுயற்சி செய்தவர். ஆனால் சூரரை போற்று படத்தில் ஹீரோ ஒரு பெரியாரிஸ்ட் போல் காண்பித்து கோபிநாத்தின் புகழையும் பெருமையும் சூர்யா திருடிக்கொண்டார்..

இதோ அடுத்த சம்பவம். ஜெய்பீம் படத்தில் சப் இன்ஸ்பெக்டராக வரும் குருமூர்த்தி என்பவரை வன்னியர் சமூக ஆளாக சித்தரித்து இருளர் இன மக்களுக்கு வன்னியர் சமூக மக்கள் எதிரி போல் மிகவும் வன்மமாக காட்டியுள்ளார். ஆனால் உண்மையில் அந்த சப் இன்ஸ்பெக்டர் பெயர் அந்தோணி சாமி. இவர் மாற்று சமூகத்தை சேர்நதவர்.(வன்னியர் சமூகம் அல்ல)இப்படி உண்மையை மறைத்து நடிகர் சூர்யா வன்னியர் தேவர் கவுண்டர் இன மக்களை வம்புக்கு இழுப்பது ஏன்..??

இதுல பெரிய உண்மை என்னனா ராசாக்கண்ணு இறந்த போது அவருக்கு நீதி கேட்டு போராடியவர்கள் வன்னியர் சமூகத்தை சேர்நதவர்கள் என்பதற்கான ஆதராமும் உண்டு. இன்னும் பல ஆதாரங்களை திரட்டி வருகிறேன்…நடிகர் சூர்யா செய்வது சரியா தவறா என மக்களே நீங்களே இதை பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க…என ஜெயம்SKகோபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியில் வெற்றிமாறன்…