முருகதாஸை அவமானப்படுத்திய விஜய்….அவமானம் தங்க முடியமால் முருகதாஸ் எடுத்த விபரீத முடிவு..!

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்த தீனா படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர் ஏ .ஆர்.முருகதாஸ். முதல் படமே மிக பெரிய ஹிட், நடிகர் அஜித் குமாரை தல என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்த படம் தீனா. இதன் பின்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை முன்னனி இயக்குனர் வரிசையில் இடம்பெற செய்தது.

இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தை நடிகர் அமீர்கான் நடிப்பில் இந்தியில் இயக்கினார் முருகதாஸ். இந்த படத்திற்கு பின்பு இந்தி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து அங்கேயும் இயக்குனராக ஒரு ரவுண்டு வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்பு முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என முன்னணி நடிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வந்தார் முருகதாஸ்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன், வில்லு, வேட்டைக்காரன், சுறா ,வேலாயுதம் என்று தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்து வந்தார். அப்போது இந்தி, தமிழ் ,தெலுங்கு என் உச்சத்தில் இருந்து வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி.

இந்த படம் விஜய் சினிமா வாழ்க்கையில் ஒரு மையில் கல்லாக அமைந்தது. துப்பாக்கி படத்திற்கு சமமான ஒரு படத்தை தற்பொழுது வரை நடிகர் விஜையால் கொடுக்க முடியவில்லை. மேலும் அணைத்து தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தான் துப்பாக்கி. இந்த படத்துக்கு பின்பு மீண்டும் முருகதாஸ் உடன் இணைந்து கத்தி படத்தில் நடித்தார் விஜய். விவசாயம் சார்ந்த இந்த படம் சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பின்பு முருகதாஸ் – விஜய் கூட்டணி வெற்றி கூட்டணி என அழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இதே கூட்டணியில் வெளியான சர்க்கார் படம் தோல்வியை தழுவியது, அடுத்து ரஜினியை வைத்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படுதோல்வி அடைத்தது. இதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் மிக பெரிய பின்னடைவை சந்தித்தார். மீண்டும் புத்துணர்வு பெறுவதர்க்கு விஜய் உடன் ஒரு படம் செய்வது என முடிவு செய்தார் முருகதாஸ்.

புதிய படத்துக்கான கதை விஜய்க்கு பிடித்து போனது. படத்துக்கான அறிவிப்பும் வெளியாகி அடுத்த கட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கினர் முருகதாஸ். இந்த படம் துப்பாக்கி போன்று ஒவ்வொரு காட்சியும் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முருகதாஸ். இந்நிலையில் படப்பிடிப்புக்கான அணைத்து வேலைகளும் நடந்து படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில், படத்தின் கதை பிடிக்கவில்லை. படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என முருகதாஸிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை ட்ராப் செய்வதாக தெரிவித்துள்ளார் விஜய். அத்துடன் இந்த படம் கைவிடப்பட்டது. இதற்கு காரணம் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார் தோல்வியை தழுவியுள்ளது, அவர் படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் நெருக்கமானவர்கள் சொன்னதை கேட்டு தான், இப்படி ஒரு முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் முருகதாஸ் க்கு மிக பெரிய அவமானத்தை பெற்று தந்தது.

மேலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு துப்பாக்கி படம் மூலம் சினிமாவில் அவரை மீட்டெடுத்தவர் முருகதாஸ். இந்நிலையில் தற்பொழுது சரிவை சந்தித்துள்ள முருகதாஸை கைவிட்டு நன்றி மறந்த விஜய் போன்றவர்களின் செயல் முருகதாஸுக்கு மிக பெரிய மன உளைச்சலை பெற்று தந்துள்ளது என்றும், இதனால் தான் சமீபத்தில் சினிமாவை விட்டு போகிறேன் என ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடியாக பேசியதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சரண்டரான விஜய்…. ஐயா நீங்க தான் என்னை காப்பாத்தணும்..! எங்கே ..என்ன நடந்தது தெரியுமா.?