சோசியல் மீடியாவுக்குள் முதன்முறையாக நுழைந்த ஜோதிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி

0

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். சில வருடங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அவரது வீட்டிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்க மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஹீரோவுடன் சேர்ந்து டூயட் ஆடுவதுபோல இல்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.

இவ்வளவு காலம் முன்னணி நடிகையாக வலம்வந்தாலும் இதுவரை சோசியல் மீடியா பக்கம் திரும்பாமல் இருந்த ஜோதிகா, தற்போது முதன்முதலாக சோசியல் மீடியாவில் காலடியெடுத்து வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக கணக்கு தொடங்கியுள்ள ஜோதிகா, அதில் முதல் புகைப்படமாக இமயமலைத் தொடரில் தேசியக் கொடியை தூக்கிப் பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் 1 மணி நேரத்திற்குள்ளாகவே 1 மில்லியன் லைக்குகளை அள்ளிச் சென்றுள்ளது. அதேசமயம் அவரை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கையும் 1 மில்லியனை தாண்டிச் சென்றுள்ளது. இது ஜோதிகாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.