வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த திமுக பிரமுகர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்..! எங்கே அக்கா ஜோதிமணி எம்பி.?

0

சமீப காலமாக பாலியல் குற்றசாட்டு தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இதில் குறிப்பாக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார் வந்த வண்ணம் உள்ளது, தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த திமுக ஒன்றிய செயலாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் குஜிலியம்பாறை சேர்ந்த முத்து பொன்னரசி தனது கணவர் குமரேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கணவரிடம் பிரிந்து, திமுக பிரமுகர் சிவகுமாருடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது, திமுக பிரமுகர் சிவக்குமார் அதே பகுதியில் மதுபான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 9 வயது சிறுவனை வைத்து மதுபான விற்பனை செய்ததாக திமுக பிரமுகர் சிவக்குமார் மீது குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் முத்து பொன்னரசிக்கும் – முதல் கணவருக்கு நித்திகா என்கிற பெண் குழந்தை இருந்தது, ஆனால் சிவகுமாரை இரண்டாவதாக முத்து பொன்னரசி திருமணம் செய்த பின் அவருடை மகள் தாய் மற்றும் இரண்டாவது கனவர் திமுக பிரமுகரான சிவகுமார் ஆகியோரிடம் வளர்ந்து வந்தது, தற்போது நிதிக்காவுக்கு 15 வயதாகிறது, இந்நிலையில் திமுக பிரமுகர் சிவகுமார் வளர்ப்பு மகள் நித்திகாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகுமார் செல்போனில் ஆபாசப் படங்களை காண்பித்து அந்தரங்க உறுப்புகளை தொடுவதாக சிறுமி நித்திகா தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து, குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் முத்து பொன்னரசி புகார் அளித்ததின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர், தன்னை போலீசார் கைது செய்யாலாம் என அறிந்த திமுக பிரமுகர் சிவக்குமார் தலைமறைவானார்.

இந்நிலையில், 15வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த திமுக பிரமுகர் சிவகுமாரை தேடி வருகின்றனர்.இந்த செய்தியை பார்க்கும் வலைதளவாசிகள், சமீபத்தில் தேசிய கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் ஆபாச வீடியோ வெளியே வந்ததற்கு பொங்கி எழுந்து அந்த நபர் சார்ந்த கட்சியை முற்றுகையிடுவதாக பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிமணி எம்பி தற்போது திமுக பிரமுகரின் செயலுக்கு அறிவாலயத்தை நோக்கி படையெடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.