முதலில் அதில் இருந்து வெளிய வாங்க…தமிழ் சினிமா துறையினருக்கு தக்க பதிலடி கொடுத்த தெலுங்கு நடிகர்…

0
Follow on Google News

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த தமிழ் சினிமா துறையினர் அண்ணார்ந்து பார்க்கும் வகையில் தெலுங்கு சினிமா மிக பெரிய வளர்ச்சியை பெற்று, இன்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது. மேலும் தெலுங்கு பட முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களின் அடுத்த அப்டேட் என்ன என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமா துறையினர் காலத்திற்கேற்ப தெலுங்கு சினிமாவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியுள்ளனர். அதன் படி முன்னணி தமிழ் சினிமா இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்கத் தொடங்கி விட்டார்கள், அதேபோன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் தெலுங்கு சினிமா இயக்குனர் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

ஒரு காலத்தில் சென்னையில் ஏ வி எம் ஸ்டூடியோ, ஜெமினி ஸ்டூடியோ, போன்ற இடங்களில் தெலுங்கு சினிமா துறையினர் படப்பிடிப்பு நடத்தி வந்த நிலையில் தற்பொழுது தமிழ் சினிமா துறையினர் எந்த ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்றால் ஹைராபாத் செல்லும் அளவுக்கு அதி நவீன மயமாக மாறிவிட்டது தெலுங்கு சினிமா துறை.

குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி , ஆர்.ஆர். ஆர் போன்ற படங்கள் வெளியான பின்பு தான் ஒட்டு மொத்த இந்தியாவையும் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பியது, இந்நிலையில் பிற மொழி படங்களான தெலுங்கு, மலையாளம், கண்னடம் போன்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், அவர்களின் படத்தை அவர்கள் மொழி சார்ந்த படமாக ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைப்பது கிடையாது,

அவர்கள் படத்தை ஒரு இந்தியன் சினிமா என்கிற நோக்கில் தான் அண்ட் படத்தை உருவாக்குகிறார்கள், அதனால் தான் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எப் போன்ற படங்கள் இந்தியா அளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு சிலரின் தவறான கண்ணோட்டத்தினால் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சினிமாக்கள் இதற்கு முன்பு உருவாகி வந்தது குறிப்பிடதக்கது.

ஆனால் மொழி ரீதியாக குறுகிய வட்டத்துக்குள் இருந்தால் தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று விடும் என்பதை உணர்ந்து தான், தற்பொழுது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பிற மொழியில் உள்ள முன்னனி நடிகர்களை நடிக்க வைத்து அது ஒரு பேன் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வரும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது பலருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த நிலையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் வெளியான வினோதய சித்தம் என்கிற திரைப்படத்தை தற்பொழுது தெலுங்கில் ரிமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி இதில் பவன் கல்யாண் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய பவன் கல்யாண், தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

ஒரு வேலையை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம். எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போதுதான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்கு அடைத்து விடும்.

சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்” என்று பவன் கல்யாண் மேடையில் சமுத்திரக்கனியை வைத்து கொண்டே பேசியது குறிப்பிடதக்கது.